சென்னையில் சுஸுகி ஹயாட்டே அறிமுகம்: விலை விபரம்

அக்செஸ் மூலம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சுஸுகி நிறுவனம் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்த குறையை போக்கும் விதத்தில் 112 சிசி திறன் கொண்ட புதிய பைக்கை கடந்த வாரம் சுஸுகி அறிமுகம் செய்தது. ஹயாட்டே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக் நேற்று சென்னையில் முறைப்படி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.
சுஸுகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அதுல் குப்தா இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்," 100 சிசி முதல் 110 சிசி மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் மாதத்திற்கு 4.5 லட்சம் பைக்குகள் விற்பனையாகிறது.
எனவே, இந்த மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக ஹயாட்டே பைக்கை அறிமுகம் செய்துள்ளோம். மேலும், எங்களது மொத்த விற்பனையில் தமிழகம் 10 சதவீத பங்களிப்பை கொடுத்து வருகிறது.
எனவே, தமிழக மார்க்கெட்டுக்கு ஆரம்பம் முதலே முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஹயாட்டே நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்," என்றார்.
இரண்டு மாடல்களில் வந்துள்ள புதிய ஹயாட்டே கேஎஸ் மாடல் ரூ.41,356 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஹயாட்டே எஸ்எஸ் மாடல் ரூ.43,356 எக்ஸ்ஷோரூம் விலையிலும் சென்னையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications