ரூ.45,431 விலையில் புதிய சுஸுகி ஸ்விஷ் பவர் ஸ்கூட்டர் அறிமுகம்
கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய ஸ்கூட்டரை சுஸுகி பார்வைக்கு வைத்திருந்தது. அப்போதிலிருந்தே இந்த புதிய ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருந்தது.
இந்த நிலையில், ஸ்விஷ் 125 ஸ்கூட்டரை முறைப்படி அறிமுகம் செய்துள்ளது சுஸுகி. இந்த புதிய ஸ்கூட்டர் வருகையால், சுஸுகியின் வெற்றிகரமான மாடலான ஆக்செஸ் ஸ்கூட்டருக்கு கொஞ்சம் பெரு மூச்சு கிடைக்கும்.
ஏனெனில், ஆக்செஸ் ஸ்கூட்டருக்கான தேவையை சமாளிக்க முடியாமல்தான் இந்த புதிய ஸ்கூட்டரை சுஸுகி அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்விஷ் ஸ்கூட்டரில் 4 ஸ்ட்ரோக் 125 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 8.58 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில், சிவிடி ட்ரான்மிஷன் (ஆட்டோமேட்டிக் கியர் தொழில்நுட்பம்) கொண்டிருப்பதால், பவர் மற்றும் அருமையான டார்க்கை வழங்கும் என்பதால் கையாளுமை சிறப்பாக இருக்கும்.
இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.45,431 என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









