அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் சுஸுகியின் புதிய ஹயாட்டே பைக்

Suzuki-Hayate
அடுத்த மாதம் தனது புதிய 110 சிசி ஹயாட்டே பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இந்தியாவில் 100சிசி முதல் 125 வரையிலான பைக்குகள் விற்பனையில் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்த செக்மென்ட்டில் ஹீரோ பேஷன், ஹோண்டா ஷைன் உள்ளிட்ட பைக் மாடல்கள் முன்னிலை வகிக்கின்றன.

இந்த நிலையில், இந்த செக்மென்ட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் வகையில் புதிய பைக்கை சுஸுகி அறிமுகம் செய்ய உள்ளது. ஹீட், ஜீயஸ் மற்றும் ஸ்லிங்ஷாட் ஆகிய பைக்குகளை சுஸுகி விற்பனை செய்து வந்தாலும், எதிர்பார்த்த விற்பனையை அந்த மாடல்கள் கொடுக்கவில்லை.

இதையடுத்து, இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களுடன் ஹயாட்டே என்ற பெயரில் புதிய 110 சிசி பைக்கை சுஸுகி களமிறக்குகிறது. கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய பைக்கை சுஸுகி பார்வைக்கு வைத்திருந்தது.

வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வடிவமைப்பு மற்றும அதிக மைலேஜ் தரும் எஞ்சினுடன் வரும் இந்த புதிய பைக்கை அடுத்த மாதம் சுஸுகி விற்பனைக்கு கொண்டு வருகிறது. ரூ.48,000 விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 24, 2012, 10:27 [IST]
English summary
Japanese motorcycle manufacturer Suzuki to formally launch the Hayate commuter bike next month. The commuter bike was displayed in Delhi Auto Expo last month. The new hayate will come with 110 cc engine and expeted price at Rs.48,000 Ex showroom. The new Hayate will give tough competition to Hero passion and Honda Shine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+