ப்ளஷரை டெஸ்ட் டிரைவ் செய்தால் ஹிருத்திக்கை சந்திக்கும் வாய்ப்பு

ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்செஸ் ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுக்கு இதுவரை ஹீரோ மோட்டோவின் ப்ளஷர் ஒரு போட்டியாக இருக்கவில்லை. மாஸ் பைக் செக்மென்ட்டில் ஹீரோ முதலிடத்தில் இருப்பதால் ஸ்கூட்டர் மார்க்கெட்டை பற்றியும் இதுவரை ஹீரோ கவலைப்படவில்லை.
ஆனால், ஸ்கூட்டர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மவுசை கண்டு ஹீரோவும் ப்ளஷர் ஸ்கூட்டரின் விற்பனைக்கு ப்ரஷர் தர முடிவு செய்துள்ளது. ப்ளஷரை பிரபலப்படுத்தும் விதமாக கவர்ச்சிகரமான புதிய அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ப்ளஷர் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து நடிகர் ஹிருத்திக் ரோஷனை சந்திக்கும் வாய்ப்பை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம், இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் தனது ப்ளஷரை எளிதாக பிரபலப்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகர் ஹிருத்திக் ரோஷன் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








