பெண்களுக்கான டாப்-5 ஸ்கூட்டர்கள்!
வேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது கற்றுக்கொள்வது அவசியமாகியுள்ளது. கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்குத்தான் ஸ்கூட்டர்கள் என்ற நிலை மாறி தற்போது இல்லத்தரசிகளின் ஆஸ்தான வாகனமாக மாறியுள்ளது.
குழந்தைகளை பள்ளியில் விடுவது முதல் ஷாப்பிங் வரை குடும்ப பொறுப்புகளை சமாளிக்க பெண்களின் வலதுகரமாக ஸ்கூட்டர்கள் மாறி இருக்கின்றன. மேலும், நம் நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து ஓட்டுவதற்கும், பெண்கள் கையாள ஏற்ற வாகனமாகவும் இருப்பதும் ஸ்கூட்டர்களின் ப்ளஸ் பாயின்ட். இந்த நிலையில், பெண்கள் கையாளுமை மற்றும் வசதிகளுக்கு ஏற்ற டாப்-5 ஸ்கூட்டர் மாடல்களை இங்கே தருகிறோம்.

எதன் அடிப்படையில்..!!
விலை, கையாளுமை, பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாக கொண்டு இந்த செய்தி தொகுக்கப்ப்படிருக்கிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸ்ட்ரீக்
சென்னை விலை: ரூ.49.792
மைலேஜ்: 53 கிமீ/லி
பருமனான உடல்வாகு, மெல்லிய உடல்வாகு கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஏற்ற ஸ்டைலான சிறந்த ஸ்கூட்டர். மொபைல் சார்ஜர், செல்ப் ஸ்டார்ட், ஸ்டெப் அப் சீட், எரிபொருள் எச்சரிக்கை மானி, சறுக்காத தொழில்நுட்பம் கொண்ட ட்யூப்லெஸ் டயர், எல்இடி டெயில் லைட் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். எளிதாக சென்டர் ஸ்டான்டில் நிறுத்த முடியும். 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. பெட்ரோல் நிரப்புவதற்கு இருக்கையை திறந்து மூட வேண்டிய அவசியமில்லை. 5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 87.8 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 96 கிலோ எடை கொண்டது. 12வோல்ட் ஹெட்லைட் இரவு பயணத்தை எளிதாக்கும். 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்
சென்னை விலை: ரூ.47,176
மைலேஜ்: 50 கிமீ/லி
கல்லூரி செல்லும் பெண்களின் முதல் சாய்ஸ். பெயருக்கு ஏற்றாற்போல் பெப்பியான வடிவமைப்பை கொண்டிருக்கிறது. செல்ஃப் ஸ்டார்ட், பஞ்சர் ரெஸிஸ்டன்ட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இலகு எடை கொண்டதால் எளிதாக . மொபைல் சார்ஜர் உள்ளது. 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ரீக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. 4 வண்ணங்களில் கிடைக்கிறது.

யமஹா ரே
சென்னை விலை: ரூ.53,000
மைலேஜ்: 50 கிமீ/லி
மார்க்கெட்டுக்கு புதிதாக வந்திருக்கும் ஸ்கூட்டர். பெண்களுக்காக பெண்களே தயாரிக்கும் ஸ்கூட்டர் இது. செல்ப் ஸ்டார்ட், ஸ்டெப் அப் சீட், லோ பேட்டரி இன்டிகேட்டர், பாஸ் லைட் சுவிட்ச், 15 லிட்டர் ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. எம்ஆர்எப் ஸாப்பர்ஸ் டயர்களை கொண்டிருப்பதால் கூடுதல் பலம். 7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 113 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 104 கிலோ எடை கொண்டது. 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

ஹோண்டா டியோ
சென்னை விலை: ரூ.53,336
மைலேஜ்: 40 கிமீ/லி
ஸ்கூட்டர் மார்க்கெட் லீடராக திகழும் ஹோண்டாவின் அதிக வரவேற்பை பெற்ற நம்பிக்கையான மாடல். செல்ப் ஸ்டார்ட், லோ பேட்டரி இன்டிகேட்டர், எரிபொருள் எச்சரிக்கை மானி உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. புதிய டியோ வடிவமைப்பில் இன்னும் ஸ்டைலான ஸ்கூட்டராகியிருக்கிறது. மேட் பினிஷிங் கொண்ட மாடலும் உண்டு. 110 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் 8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 109 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா ஃபிளைட்
விலை: ரூ.47,082
மைலேஜ்: 44 கிமீ/லி
வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற மஹிந்திராவின் தயாரிப்பு. பன்முக பயன்பாடு வசதி கொண்ட சாவியை கொண்டிருக்கிறது. ஆன்/ஆஃப் செய்வதற்கும், பெட்ரோல் டேங்க் லாக் திறப்பதற்கும், வண்டியை சைடு லாக் செய்யவும் ஒரே சாவி துவாரத்தில் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. செல்ஃப் ஸ்டார்ட் வசதியும் உண்டு. எரிபொருள் நிரப்புவதற்கு இருக்கையை திறக்க வேண்டாம். பொருட்களை வைப்பதற்கு இருக்கைக்கு கீழே அதிக இடவசதி உள்ளது. 106 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் 8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.6 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 வண்ணங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








