புதிய 125சிசி பைக்கை தயாரிக்கும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ்

பிரிட்டனை சேர்ந்த ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிரிமியம் பைக் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 7 புதிய பிரிமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இந்தியாவில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது.
இந்த நிலையில், தனது நிறுவனத்தின் கொள்கைகளை அந்த நிறுவனம் மாற்றிக்கொண்டுள்ளது. பிரிமியம் பிராண்டாக இருந்து வரும் ட்ரையம்ப் விரைவில் 125 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் தயாரிப்பிலும் ஈடுபடுகிறது.
இந்தியா உள்ளிட்ட மாஸ் பைக் மார்க்கெட்டு்களில் விற்பனை செய்யும் வகையில் இந்த பைக்கை அந்த நிறுவனம் வடிவமைக்கிறது. மேலும், இந்த பைக் ஹீரோ, பஜாஜ், டிவிஎஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பெரும் போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் வரும் என்கிறது ட்ரையம் வட்டாரத் தகவல்கள்.


Click it and Unblock the Notifications








