எரிபொருள் சிக்கன பைக்குகள் தயாரிப்பில் டிவிஎஸ் மும்முரம்: அடுத்த ஆண்டு அறிமுகம்

விற்பனையில் பின்தங்கியுள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் முன்னேறுவதற்கான வழிவகைகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. ஹோண்டா, பஜாஜ் ஆகிய நிறுவனங்களை காட்டிலும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் புதிய தொழில்நுட்பத்தை கண்டறியும் முனைப்பில் இருக்கிறது.
எனவே, சாதாரண பைக்குகளை விட 20 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் அளிக்கும் பைக்குகள் தயாரிப்பில் அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த பைக்குகள் பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த புதிய பைக்குகள் விற்பனைக்கு வந்துவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர, ஆற்றல் விரயமாவதை தவிர்த்து காற்றை கிழித்து செல்லும் ஏரோ டைனமிக்ஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகளையும் அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலம், 10 சதவீத எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. தவிரவும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட பைக் தயாரிப்புக்கும் டிவிஎஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








