புதிய 125 சிசி பைக்கை விரைவில் களமிறக்குகிறது டிவிஎஸ்

நாட்டின் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் கம்பெனி கிராமப்புற மார்க்கெட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறது.
ஆனாலும், பிற நிறுவனங்களுடன் வேகமாக போட்டி போடும் அளவுக்கு மோட்டார்சைக்கிள் மாடல் இல்லாமல் அந்த நிறுவனம் தவிக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட் மற்றும் அப்பாச்சி மட்டுமே அந்த நிறுவனத்தின் விற்பனையில் ஓரளவுக்கு கைகொடுத்து வருகிறது.
மேலும், மூன்றாம் இடத்தில் இருந்த டிவிஎஸ் மோட்டார்சை ஹோண்டா கடந்த சில மாதங்களுக்கு முன் பின்னுக்குத் தள்ளியது. இந்த நிலையில், மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க டிவிஎஸ் திட்டமி்ட்டுள்ளது.
இதற்காக, 125 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட புத்தம் புதிய பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ரேடியோன் 125டிஎக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பைக் வரும் ஜூலை- ஆகஸ்ட் இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
125 சிசி செக்மென்ட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் டிஸ்கவர் வரிசைகளுக்கு இந்த புதிய பைக் கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்க் பிரேக் மற்றும் இதர அம்சங்களுடன் வரும் இந்த புதிய 125 சிசி பைக்கை மார்க்கெட்டில் சவாலான விலையில் புதிய பைக்கை அறிமுகப்படுத்த இருப்பதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








