வரும் 23ந் தேதி புதிய அப்பாச்சி அறிமுகம்: டிவிஎஸ் அறிவிப்பு

வரும் 23ந் தேதி மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய அப்பாச்சி பைக்கை அறிமுகப்படுத்த இருப்பதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று அப்பாச்சி. பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்களில் அப்பாச்சி கிடைக்கிறது.

இந்த நிலையில், மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள போட்டியை கருத்தில்க்கொண்டும், பார்த்து பழகிப்போன வடிவமைப்பை மாற்றும் வகையிலும் அப்பாச்சியின் வடிவமைப்பில் சிறிய மாறுதல்களை செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறது டிவிஎஸ்.

மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அப்பாச்சியின் டீஸர் படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு ஆவலைத் தூண்டியுள்ளது டிவிஎஸ். முன்பக்கத்தில் ஹெட்லைட் ஸ்கூப் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, முன்பக்கம் முன்பை விட கூடுதல் கவர்ச்சியுடன் அப்பாச்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸினான் லைட் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுடன் அப்பாச்சி களமிறங்குவதால் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 20, 2012, 16:50 [IST]
English summary
The suspense over the launch of the tvs motor's new Apache is coming to an end. TVS has announced the date on which it will launch its refreshed 2010 Apache. TVS has stated in the Apache Facebook page that it will be launching the new Apache on April 23.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+