அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது டிவிஎஸ் ஃபீனிக்ஸ்

ஹீரோ, பஜாஜுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் இருந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் ஹோண்டாவிடம் தனது இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு தற்போது நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த நிலையில், இழந்த இடத்தை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் தீவிரப்படுத்தியிருக்கிறது.
இதற்காக, புதிய மாடல்களையும் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் முதலாவதாக புதிய 125 சிசி பைக்கை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ஃபீனிக்ஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த புதிய பைக் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக டிவிஎஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், எல்இடி ஹெட்லைட் மற்றும் டேஞ்சர் விளக்குகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை கவரும் புதிய அம்சங்களுடன் இந்த புதிய பைக் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா ஷைனுக்கு இந்த புதிய பைக் நேரடி போட்டியை கொடுக்கலாம்.
ஃபீனிக்ஸை வைத்து உயிர்த்தெழுமா டிவிஎஸ், பொறுத்திருந்து பார்ப்போம்!


Click it and Unblock the Notifications








