மேம்படுத்தப்பட்ட புதிய அப்பாச்சி: டிவிஎஸ் அறிமுகம்

Tvs Apache
வடிவமைப்பு மற்றும் வண்ணத்தில் மாற்றங்களுடன் புதிய அப்பாச்சி பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் இன்று அறிமுகம் செய்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான அப்பாச்சி ஆர்டிஆர் விற்பனையில் கைகொடுத்து வருகிறது.

இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் கேடிஎம் ட்யூக் பைக்குகளால் அப்பாச்சி மார்க்கெட்டுக்கு ஆபத்து வந்துள்ளது.

இதையடுத்து, அப்பாச்சியை புதுப்பொலிவுடன் டிவிஎஸ் இன்று அறிமுகம் செய்தது. புதிய அப்பாச்சி வடிவமைப்பில் புதிய தோற்றத்துடன் வரும் என்று மீடியாவில் புரளிகள் பரவி வந்தன.

ஆனால், எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் இல்லை. முன்புற ஹெட்லைட் ஸ்கூப் வடிவமைப்பு மாறி்யுள்ளது. எஞ்சினுக்கு கீழே ஸ்போர்ட்டியான லுக் தரும் எஞ்சின் கவுல் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் டேங்க்கில் பக்கவாட்டில் பெரிய பைக் தோற்றத்தை தருவதற்காக கூடுதல் ஸ்கூப், பகல் நேர ரன்னிங் விளக்குகள் ஆகியவை புதிய அப்பாச்சியின் கூடுதலாக தெரிகின்றன. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய அப்பாச்சி மூன்று வேரியன்ட்களில் 4 டியூவல் டோன் கலர்களில் கிடைக்கும். அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடல் ரூ.67,505 விலையிலும், அப்பாச்சி ஆர்டிஆர் 180 மாடல் ரூ.72,090 விலையிலும், ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட அப்பாச்சி 180 ஆர்டிஆர்மாடல் ரூ.82,780 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 30, 2012, 16:11 [IST]
English summary
Homegrown two wheeler maker Tvs motors has launched new apache sports bike in Indian market at Rs.67,505.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+