சூப்பர் பைக் தயாரிக்க பிஎம்டபிள்யூவுடன் கூட்டணி அமைக்கும் டிவிஎஸ்

டெல்லியில் புதிய ஃபீனிக்ஸ் 125சிசி பைக்கை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. இதில், பங்கேற்ற டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோயிந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"சந்தை போட்டியை சமாளிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறோம். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தயாரிப்புகளை கொடு்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.
மேலும், தொழில்நுட்ப பகிர்தலுக்காக ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் நீண்ட கால அடிப்படையில் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்ததப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகள் நடப்பு நிதி ஆண்டுக்குள் வெளியிடப்படும்," என்றார்.
சொகுசு கார் மற்றும் சூப்பர் பைக் தயாரிப்பில் சிறந்து விளங்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு முதல் பிஎம்டபிள்யூ மோட்டாராட் பிராண்டில் இந்தியாவில் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. டீலர் நெட்வொர்க் மற்றும் சர்வீஸ் மையங்கள் போதிய அளவு இல்லாததால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இதேபோன்று, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உயர்ரக ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக் மார்க்கெட்டில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. எனவே, இரு நிறுவனங்களும் பயன்பெறும் விதத்தில் இந்த கூட்டணி அமைக்க தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








