மீண்டும் விக்டரை களமிறக்கும் டிவிஎஸ் மோட்டார்

Tvs Victor
உள்நாட்டு மார்க்கெட்டில் விற்பனை நிறுத்தப்பட்ட டிவிஎஸ் விக்டர் பைக்கை மீண்டும் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் புதிய விக்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

சுஸுகியின் கூட்டணியில் முன்பு இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் உற்பத்தி செய்து வந்தது. இந்த நிலையில், சுஸுகி பிரிந்து சென்றதையடுத்து தனித்து களமிறங்கிய டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பைக்தான் விக்டர்.

மேலும், மார்க்கெட் போட்டியை சமாளிக்க விக்டர் ஜிஎல், எட்ஜ், ஜிஎல்எக்ஸ் 125சிசி ஆகிய மாடல்களில் விக்டரை விற்பனைக்கு விட்டது. முதலில் விற்பனையில் முக்கிய இடம் வகித்தாலும் பின்னர் போட்டியை சமாளிக்க முடியாததால் மார்க்கெட்டில் டிவிஎஸ் விக்டர் பின்தங்கியது.

இதையடுத்து, விக்டரின் விற்பனையை டிவிஎஸ் நிறுத்திவிட்டது. இந்த நிலையில், மார்க்கெட் பங்களிப்பை கூட்டும் விதமாக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 125 சிசி திறன் கொண்ட புதிய விக்டரை வரும் டிசம்பரில் விற்பனைக்கு கொண்டு வர டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, வரும் டிசம்பரில் புதிய 125 சிசி பவர் ஸ்கூட்டர் மாடலையும் டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. தவிர, அடுத்த இரு ஆண்டுகளில் 200 சிசி மற்றும் 300 சிசி திறன் கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களையும் அறிமுகம் செய்யவும் டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2012, 10:26 [IST]
English summary
Country's leading two wheeler manufacturer Tvs Motors to relaunch Victo by end of the year. The company also planning to launch New 125 cc power scooter along with Victor.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+