சென்னையில் வெஸ்பா ஸ்கூட்டர் ஷோரூம், விலை விபரம்

விற்பனை முக்கியமல்ல, தனது பிராண்டுக்கு தனி மதிப்பு கிடைக்க வேண்டுமென விரும்புவதாக கூறியுள்ள பியாஜியோ, ரூ.66,661 எக்ஸ்ஷோரூம் விலையில் வெஸ்பா ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது. பிற நிறுவனங்களின் ஆட்டோமேட்டிக் கியர் ஸ்கூட்டர்கள் அதிகபட்சம் ரூ.60,000க்குள் கிடைக்கிறது.
ஆனால், வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் ரூ.78,200 ஆன் ரோடு விலையில் சென்னையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அண்ணா நகர் மேற்கு மற்றும் ஆயிரம் விளக்கு பகுதிகளில் அமைந்துள்ள ஷோரூம்கள் வழியாக வெஸ்பா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஷோரூம்களில் தற்போது ரூ.5000 முன்பணம் செலுத்தி வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெஸ்பா ஸ்கூட்டர்கள் ஆக்சஸெரீஸ் இல்லாமல் ரூ.78,200 ஆன்ரோடு விலை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சஸெரீகளை சேர்த்தால் விலை ரூ.80,000 தாண்டும்.
சென்னையில் வெஸ்பா ஸ்கூட்டர் ஷோரூம் முகவரி:
ஆரஞ்ச் மோட்டார்ஸ்
நம்பர் 6, ஜவஹர்லால் நேரு சாலை,
வீ கேர் மருத்துவமனை எதிர்புறம்,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை-40
தொலைபேசி எண்கள்: 044-26210051/61
பிள்ளை மோட்டார் கம்பெனி
127, க்ரீம்ஸ் ரோடு,
எம்ஆர்எப் பில்டிங் அருகில்,
ஆயிரம் விளக்கு,
சென்னை-06
தொலைபேசி எண்கள்: 044-28295854/ 28293150


Click it and Unblock the Notifications