இந்திய சாலைகளில் மீண்டும் தடம் பதிக்கும் வெஸ்பா ஸ்கூட்டர்

அடுத்த மாதம் வெஸ்பா ஸ்கூட்டர்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருகிறது பியாஜியோ. ரூ.60,000 விலையில் புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இத்தாலிய நிறுவனமான பியாஜியோ அபே ஆட்டோ தயாரிப்பின் மூலம் இந்திய சந்தையில் நிலையான இடத்தை தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனம் மீண்டும் இருசக்கர வாகன சந்தையில் நுழைய உள்ளது.

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த வெஸ்பா ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருகிறது பியாஜியோ. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெஸ்பா ஸ்கூட்டரை பார்வைக்கு வைத்திருந்தது பியாஜியோ.

இந்த நிலையில், அடுத்த மாதம் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஏப்ரல் 26ந் தேதி வெஸ்பா ஸ்கூட்டர் விற்பனைக்காக முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரில் 10.26 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 125 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். சிவிடி ட்ரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் கொண்ட கியர் பாக்சுடன் வரும் இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் தரும் என்று பியாஜியோ தெரிவித்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி அக்சஸெஸ் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக வரும் இந்த ஸ்கூட்டரின் விலைதான் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. 7 வண்ணங்களில் வரும் இந்த ஸ்கூட்டர் ரூ.60,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 29, 2012, 14:25 [IST]
English summary
Vespa Scooters that made a grand re-entry in to India during the 2012 Delhi Auto Expo will soon be seen on India roads. The company is planning for a commercial launch of its automatic scooters in India this April. Vespa will bring in its LX 125 automatic scooter to its new showrooms spread across the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+