வெஸ்பா டேபிள் லேம்ப்... ஸ்கூட்டரை விட விலை அதிகம்!

பழமைவாய்ந்த ஸ்கூட்டர் பிராண்டாக இத்தாலியை சேர்ந்த வெஸ்பா விளங்குகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் கால் பதித்திருக்கிறது வெஸ்பா பிராண்ட். வெஸ்பா எல்எக்ஸ் 125 என்ற ஸ்கூட்டரை பிரிமியம் அந்தஸ்தில் நிலை நிறுத்திய அந்த நிறுவனம் அடுத்தடுத்து புதிய மாடல்கலை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிலையில், வெஸ்பா பிராண்டின் பிரிமியத்தை பரைசாற்றும் விதத்தில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கிறது. வெஸ்பா பிராண்டின் மீதுள்ள காதலால் லம்போனி லியோனார்ட் என்ற ஓவியர் வெஸ்பா ஸ்கூட்டர்களின் ஒரிஜினல் பாகங்களை கொண்டு டேபிள் லேம்ப்புகளை உருவாக்கி அசத்தி வருகிறார். வெஸ்பா ஸ்கூட்டரைவிட விலை மிக்க இந்த டேபிள் லேம்ப்களின் படங்கள் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இது அக்மார்க் கைவினை பொருள்

இது அக்மார்க் கைவினை பொருள்

ஒவ்வொரு டேபிள் லேம்ப்பும் முழுக்க முழுக்க லம்போனி லியோனார்டின் எண்ண ஓட்டத்தில், கலைநயத்தோடு கைவினை பொருளாக உருவாகிறது.

விலை... அம்மாடியோவ்?

விலை... அம்மாடியோவ்?

வெஸ்பா பிராண்டின் ரசிகர்கள் மட்டுமே இந்த விலையை கொடுத்து வாங்குவதற்கு முன் வருவார்கள். ஏனெனில், இந்த டேபிள் லேம்ப்புகள் 1772 டாலர் முதல் 2044 அமெரிக்க டாலர் விலையில், அதாவது, இந்திய மதிப்பில் ரூ.96,000 முதல் ரூ.1.11 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெயிட்டிங் பீரியட்.. இதுக்குமா?

வெயிட்டிங் பீரியட்.. இதுக்குமா?

இந்த டேபிள் லேம்ப்புகளை ஆர்டர் செய்தால் உடனே கிடைக்காது. ஏனெனில், இந்த டேபிள் லேம்ப்புகளை உருவாக்குவதற்கு லம்போனி பல நாட்கள் செலவிட்டு உருவாக்குகிறார். குறைந்தது 25 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டுமாம்.

விலாசம்

விலாசம்

லம்போனியின் பின்வரும் http://www.lamponislamps.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூடுதல் விபரங்கள் மற்றும் படங்களை காணலாம்.

ஒரிஜினல்..!!

ஒரிஜினல்..!!

இந்த டேபிள் லேம்ப்புகளுக்கு மார்க்கெட்டிலிருந்து வெஸ்பாவின் ஒரிஜினல் பாகங்களை பெற்று தயாரிக்கப்படுவதாக லம்போனி குறிப்பிட்டுள்ளார்.

வெஸ்பா மீது லம்போனிக்கு ஏன் ஆர்வம்?

வெஸ்பா மீது லம்போனிக்கு ஏன் ஆர்வம்?

லம்போனியும் வெஸ்பா பிராண்ட் பிறந்த இத்தாலியிலுள்ள அதே மிலன் நகரை சேர்ந்தவர்தான்.

 உள்ளே, வெளியே..!

உள்ளே, வெளியே..!

வெளியே வெஸ்பா ஸ்கூட்டரும், வீட்டுக்குள்ளே இந்த டேபிள் லேம்ப்பும் வேண்டும் எண்ணத்தை வரவழைக்கிறது இதன் டிசைன்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

சென்னையில் வெஸ்பா எல்எக்ஸ் 125 ரூ.75,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த டேபிள் லேம்ப் ரூ.96,000 என்ற விலையில்தான் ஆரம்பமாகிறது.

விலை மட்டும் குறைவாக இருந்தால்...!

விலை மட்டும் குறைவாக இருந்தால்...!

விலை மட்டும் குறைவாக இருந்தால் நிச்சயம் நம் ஷாப்பிங் லிஸ்ட்டில் இந்த டேபிள் லேம்ப்புகளை சேர்த்துவிடலாம் அல்லவா?

More from DriveSpark

Article Published On: Friday, November 16, 2012, 12:33 [IST]
English summary
Classic Vespa scooters are still being used in several countries. You can find Vespa scooters not only on the streets but inside living rooms too. Lamponi Leonard, an artist has designed table lamps using original Vespa headlights. He has not only used the head lights but also the rest of the parts in the table lamps are sourced from Vespa too.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+