புதிய பல்சரை எப்போது அறிமுகப்படுத்தப் போகிறது பஜாஜ்

பல்சர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பருடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், புத்தம் புதிய பல்சர் மாடலை அறிமுகப்படுத்தப் போவதாக பஜாஜ் அறிவித்தது.
இதனால், புதிய பல்சர் குறித்த யூகங்கள் ஏகத்துக்கும் பரவின. ஒரு வழியாக கடந்த பிப்ரவரியில் நேக்டு ஐ என்று கூறப்படும் திறந்த மேனி வடிவமைப்புடன், 200 சிசி எஞ்சினுடன் புதிய பல்சர் பைக்கை பஜாஜ் ஆட்டோ வெளியுலகுக்கு காட்டியது.
தற்போதைய பல்சர் மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன், அதிக கம்பீரத்துடன் இருந்த புதிய பல்சர் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மாதம் இறுதியிலோ அல்லது இந்த மாத துவக்கதிலோ பல்சர் விற்பனைக்கு வந்துவிடும் என்று ஏற்கனேவ தகவல்கள் கூறின. இதுகுறித்து பஜாஜ் டீலரிடம் வினவியபோது புதிய பல்சர் அறிமுகத்துக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மேலும், அடுத்த மாதம் புதிய பல்சரை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முறைப்படி புதிய பல்சரை அறிமுகம் செய்வதற்கான நாள் எதுவும் குறித்து பஜாஜ் ஆட்டோ இதுவரை அறிவிப்பு எதையும் வெளியிடாத நிலையில், சில டீலர்களில் பல்சருக்கு சத்தமில்லாமல் புக்கிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த மாதம்தான் புதிய பல்சர் விற்பனைக்கு வர இருப்பதாக தற்போது புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் சிறு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதிய பல்சர் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








