இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் சூப்பர் பைக்குகள்!

இந்தியாவில் சூப்பர் பைக்குகள் மீதான மோகம் வெகுவாக அதிகரித்து வருகிறது. மைலேஜ் என்ன? என்று கேட்ட காலம் மலையேறி தற்போது பவர்ஃபுல் எஞ்சின் கொண்ட பைக்குகள் மீது பார்வை திரும்பியுள்ளது. மேம்பட்டு வரும் சாலைகள், வாங்கும் சக்தி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் உயர்ரக பைக்குகளின் பக்கம் இந்தியர்கள் நாட்டம் செலுத்த துவங்கியுள்ளனர்.

இதனை நன்றாக புரிந்து கொண்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கடை பரப்பி வருகின்றன. இதேபோன்று, உள்நாட்டு நிறுவனங்களும் சளைக்காமல் அதிக திறன் கொண்ட உயர்ரக பைக்குகளை தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் தற்போது வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள உயர்ரக பைக்குகள் பற்றிய பிரத்யே தகவல்கள் மற்றும் சூப்பர் பைக்குகளின் சீற்றத்தை காணொளி காட்சியில் கண்டு மகிழலாம். பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்கின் மேஜிக் வீடியோவை காணத்தவறாதீர்.

பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர்

பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர்

2009ம் ஆண்டு உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பைக் மாடல் இது. கே-46 என்றும் அழைக்கப்படும் இந்த சூப்பர் பைக் 200 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சூப்பர் பைக்கை டிராய் கார்ஸெர், மார்க்கோ மெலன்டிரி, ருபென் ஸாஸ், ஆயிர்ட்டன் படாவினி உள்ளிட்ட பிரபல பைக் ரேஸர்கள் இந்த பைக்கை ரேஸ்களில் ஓட்டியுள்ளனர். தற்போது இந்த பைக் வர்த்தக ரீதியிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.20 லட்சம் விலையில் இந்த சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

பிஎம்டபிள்யூ பைக்கின் மேஜிக்

இந்த வீடியோவில் பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்கின் மேஜிக்கை கண்டு மகிழுங்கள்.

 ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்

ஃபயர்பிளேடு என்று அழைக்கப்படும் இந்த சூப்பர் பைக்கை 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது ஹோண்டா. ஹோண்டாவின் பைக் ரேஸ் டீமை சேர்ந்த எஞ்சினியர்களின் ஒத்துழைப்போடு இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் வடிவமைத்தது. உலகின் முன்னணி பைக் ரேஸர்கள் இந்த பைக்குக்கு ரசிகர்கள். ரேஸ் டிராக்கிலும் சரி, சாதாரண சாலைகளி்லும் சரி ஓட்டுவதற்கு சிறந்த சூப்பர் பைக். சிறந்த சூப்பர் பைக்குக்கான விருதுகளை குவித்துள்ள இந்த பைக்கில் 150 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.14 லட்சம் விலையில் இந்தியாவில் கிடைக்கிறது.

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்- பெர்ஃபார்மென்ஸ்

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்கின் சீற்றத்தை இந்த வீடியோவில் காணலாம்.

 டுகாட்டி மான்ஸ்ட்டர்

டுகாட்டி மான்ஸ்ட்டர்

நேக்டு டிசைன் கொண்ட பைக்குகளை விரும்புபவர்களின் முதல் சாய்ஸ் டுகாட்டி மான்ஸ்ட்டர் 796 தான். மிரட்டலான தோற்றம் கொண்ட இந்த சூப்பர் பைக்கில் 87 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 803சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.8 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பைக் மான்ஸ்ட்டர் 696, 795, 795 ஏபிஎஸ், 796, 11000, மான்ஸ்ட்டர் டீசல் ஆகிய பல மாடல்களில் கிடைக்கிறது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 796- வீடியோ

தினசரி பயன்பாட்டுக்கும் தகுந்த டுகாட்டி மான்ஸ்ட்டர் சூப்பர் பைக்கின் ஆண்மையை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

ஹார்லி டேவிட்சன் அயன் 883

ஹார்லி டேவிட்சன் அயன் 883

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் விற்பனை செய்யும் ஸ்போர்ட்ஸ்டெர் பைக் மாடல் இது. ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் அழகுக்கு மயங்காதார் யாருமில்லை. இந்த பைக்கில் 883 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.6.6 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் அயன் 883- வீடியோ

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்-1000

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்-1000

ஜப்பானிய நிறுவனமான சுஸுகியின் மிக பிரபலமான சூப்பர் பைக் மாடல். 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட் இந்த சூப்பர் பைக்கில் 191 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 1000சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.14 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர் 1000 - வீடியோ

இந்த சூப்பர் பைக்கின் பெர்ஃபார்மென்சை வீடியோவில் கண்டு ரசியுங்கள்.

ஏப்ரிலியா ஆர்எஸ்வி4

ஏப்ரிலியா ஆர்எஸ்வி4

இத்தாலிய நிறுவனமான பியாஜியோவின் கீழ் செயல்படும் ஏப்ரிலியா பிராண்டின் சூப்பர் பைக் மாடல். 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சூப்பர் பைக்கில் 177 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.18 லட்சம் கொடுத்தால் இந்த பைக்கை வாங்கலாம்.

ஏப்ரிலியா ஆர்எஸ்வி4- பெர்ஃபார்மென்ஸ் வீடியோ

ஏப்ரிலியா சூப்பர் பைக்கின் ஃபெர்ஃபார்மென்ஸை வீடியோவில் பாருங்கள்.

கவாஸாகி நிஞ்சா 650ஆர்

கவாஸாகி நிஞ்சா 650ஆர்

ஜப்பானிய நிறுவனமான கவாஸாகியின் மிகச் சிறந்த சூப்பர் பைக். 71 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.4.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கவாஸாகி நின்ஜா 650ஆர்- பெர்ஃபார்மென்ஸ் வீடியோ

பஜாஜ் கூட்டணியில் கவாஸாகி விற்பனை செய்து வரும் இந்த பைக்கின் செயல்திறனை வீடியோவில் காணலாம்.

யமஹா வி-மேக்ஸ்

யமஹா வி-மேக்ஸ்

இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ரீட் மற்றும் யமஹாவின் கூட்டில் மலர்ந்த குரூஸர் பைக் இது. இந்த பைக்கில் 197.36 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 1679 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட இந்தி நடிகர்களிடம் இந்த பைக் இருக்கிறது. ரூ.25 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

யமஹா வி-மேக்ஸ்- பெர்ஃபார்மென்ஸ் வீடியோ

யமஹா வி-மேக்ஸின் வீரதீர பராக்கிரமங்கள் குறித்த பிரத்யேக தகவல்களை வீடியோவில் கண்டும், கேட்டும் அறிந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 20, 2012, 15:33 [IST]
English summary
Speed thrills and riding a Superbike with the essential protection gear on apt road conditions will set a rider's pulse high! On that note, we scrutinize the most wanted Superbikes in India. Of Course, these performance oriented motorcycles don't come cheap, but if you are a powerslave, beyond shadow of doubt you wouldn't want to hold back from these most wanted Superbikes in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+