ஆப் ரோடு பைக்கை களமிறக்க ஹோண்டா திட்டம்

கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டாவிலிருந்து ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா கழன்று கொண்டது. மேலும், இந்திய மார்க்கெட்டில் தன்னை ஸ்திரமாக நிறுத்திக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தற்போது அந்த நிறுவனம் மோட்டார்சைக்கிள் விற்பனையில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில் அனைத்து மாடல்களும் தன் கையில் இருக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் விரும்புகிறது.
இதற்காக, ஹீரோ இம்பல்ஸ் போன்ற புதிய ஆப் ரோடு பைக்கை ஹோண்டா நிறுவனம் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தாயகமான ஜப்பானில் சமீபத்தில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்த சிஆர்எப் 250எல் ஆப் ரோடு பைக்கை இந்தியா கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமி்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிஆர்எப் 250எல் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 250 சிசி எஞ்சின் 22 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்தியாவில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டால் ரூ.1.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








