இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!

பைக்குகள் விலையை லட்சங்களில் கேட்டிருக்கிறோம். ஆனால், கோடிகளில் கேட்டதுண்டா. ஆம், படத்தில் நீங்கள் பார்க்கும் பைக்கின் விலை 1.6 கோடி ரூபாய்.

அமெரிக்காவை சேர்ந்த பைக் பந்தய வீரரின் கனவு நனவாக்கிய பைக் மாடல்தான் இது. ஈக்கோஸீ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

அதுசரி, எல்லா பைக்குகளை போன்றுதானே இருக்கிறது. அப்புறம் ஏன் இந்த விலை என்று கேட்கிறீர்களா. இந்த பைக்கின் தொழில்நுட்பமும், பயன்படுத்தப்பட்டு இருக்கும் பொருட்களும் அப்படி.

ஈக்கோஸீ பைக்

ஒரு எஸ்யூவி காரில் பொருத்தப்படும் அளவுக்கு திறன் கொண்ட 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் சாலிட் பில்லெட் அலுமினியத்தால் தயாரிக்கப்படுகிறது.

இதன் சேஸிஸ் 4130 க்ரோம்-மோலி டிக் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது இலகு எடையுடன் அதிக உறுதித்தன்மையை கொண்டது.

போர்க்குகள் மற்றும் ஷாக் அப்சார்பர்களை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்டது. டூவல் 6 பிஸ்டன்களுடன் 12 பிரேக் பேடுகள் கொண்ட முன்பக்க பிரேக் பொருத்தப்பட்டு இருப்பதால் நினைத்த இடத்தில் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்திவிடலாம்.

0-100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் சீறிப்பாய்ந்து எட்டிவிடும். அமெரிக்காவில் 3 லட்சம் டாலர் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டுமானால் 1.6 கோடி செலவாகும். இதுவரை மொத்தம் 11 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

டோணியின் கவனத்திற்கு..?

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2012, 11:01 [IST]
English summary
ECOSSE Moto Works is the premier luxury marque of innovative, limited-production motorcycles created for discerning enthusiasts. The models – each with a distinctive character and soul – are built to the highest standards of craftsmanship using the most exotic materials in never-before-seen designs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+