ரே ஸ்கூட்டர் அசெம்பிளி லைனில் முழுவதும் பெண்களை பணியமர்த்திய யமஹா

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் ரே என்ற ஸ்கூட்டருடன் முதன்முறையாக இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் நுழைந்துள்ளது. இந்த நிலையில், ரே ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும் உத்தரபிரதேசத்திலுள்ள சூரஜ்பூர் ஆலையின் உற்பத்தி பிரிவில் புதிதாக 200 பெண்களை நியமித்திருக்கிறது யமஹா.
இந்த ஸ்கூட்டரை முழுக்க முழுக்க பெண்களே அசெம்பிள் செய்கின்றனர். இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் யமஹா வரலாற்றில் முதன்முறையாக அசெம்பிளி லைனில் பெண்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
இந்த புதிய முயற்சி வாகன உற்பத்தி துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என யமஹா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக பணியில் சேர்க்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஓர் ஆண்டு முடிவில் அரசின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என்று யமஹா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








