ஒரு சில மாற்றங்களுடன் வரும் புதிய யமஹா எப்இசட் பைக்

சிறிய மாற்றங்களுடன் புதிய எப்இசட் பைக்கை யமஹா விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த புதிய எப்இசட் பைக் கூடுதலாக ஒரு கலரிலும் கிடைக்கும்.

யமஹாவின் எப்இசட் பைக்குக்கு இளைஞர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த விலையில், கம்பீரமான வடிவமைப்புடன் கிடைககும் 150 சிசி பைக் என்பதுதான் இதற்கு காரணம்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் புதிய எப்இசட் பைக்கை யமஹா விற்பனைக்கு கொண்டு வருகிறது யமஹா. புதிய எப்இசட் பைக்கின் படங்கள், விபரங்கள் யமஹா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.

புதிய எப்இசட் பைக் என்னென்ன மாற்றங்கள் கண்டிருக்கு என்பதை கீழே பார்க்கலாம்.

Yamaha New FZ


புதிய கலர்:

புதிய ஃபியரி ஆரஞ்ச் கலரிலும் யமஹா எப்இசட் வந்துள்ளது. இது கஸ்டமைசேஷன் விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் இளைஞர்களை வெகுவாக கவரும் வண்ணமாக இருக்கும். இதுதவிர, முந்தைய கருப்பு பச்சை கலவை, வெள்ளை, மற்றும் சிவப்பு கலர்களிலும் கிடைக்கும்.

பின்புற இருக்கையில் மாற்றம்:

எப்இசட் பைக்கில் பெரிய குறையாக கூறப்பட்டது இருக்கையின் பின்புறம். இருக்கையில் பின்புறம் அமர்ந்து செல்பவருக்கு மட்டுமல்ல ஓட்டுபவருக்கு சவுகரியமில்லாத வகையில் இருப்பதால் இருக்கையை சற்று நீட்டியும், அகலப்படுத்தியுள்ளது யமஹா. எப்இசட் மற்றும் எப்இசட்-எஸ் ஆகிய இரண்டு மாடல்களின் இருக்கையும் மாற்றம் கண்டுள்ளது.

புதிய கிராப் ரயில்:

இருக்கையின் பின்புறம் இருக்கும் கிராப் ரயில் எனக் கூறப்படும் கம்பியிலும் புதிய மாற்றம் செய்து விற்பனைக்கு விட்டுள்ளது யமஹா. புதிய வடிவமைப்புடன் கூடிய கிராப் ரயில் பின்புறம் அமர்ந்து செல்பவர்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.

புதிய செயின் கவர்:

செயின் கவரின் கீழ் பாகத்தில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது யமஹா. இது அதிக பாதுகாப்பையும், லுக்கையும் பைக்குக்கு தரும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 25, 2012, 16:21 [IST]
English summary
Japanese car maker Yamaha has introduces a refreshed version of FZ series bikes in India. The new version FZ is available in new Fiery Orange colour..
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+