உலகின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளை தயாரிக்கும் யமஹா

Yamaha Crux
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்வதற்காக உலகின் மிகக் குறைந்த விலை பைக்கை தயாரித்து வருவதாக யமஹா தெரிவித்துள்ளது.

ஜப்பானிய நிறுவனமான யமஹா மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் சர்வதேச அளவில் சிறந்து விளங்குகிறது. மேலும், யமஹாவின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில், உலகிலேயே குறைந்த விலை கொண்ட புதிய பைக்கை தயாரித்து வருவதாக யமஹா தெரிவித்துள்ளது. இந்த புதிய பைக் இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யமஹா நிறுவனத்தின் சிஇஓ ஹிரோயுகி சுஸுகி கூறுகையில்,"க்ரஸ் மற்றும் ஒபிஆர் 110 பைக்குகளை தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வருகிறோம். இந்தியா, ஆப்ரிக்க மார்க்கெட்டுகளில் குறைந்த விலை பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதைக் கருத்தில்கொண்டு புதிய பைக்கை தயாரித்து வருகிறோம். 500 டாலர் விலையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இந்த பைக்தான் உலகின் குறைந்த விலை பைக்காக இருக்கும்," என்றார்.

நம் நாட்டு மார்க்கெட்டில் ஹீரோ மோட்டோ கார்ப் விற்பனை செய்து வரும் சிடி டான்தான் தற்போது மார்க்கெட்டில் குறைந்த விலை பைக்காக இருக்கிறது. இந்த பைக் ரூ.36,300 விலையில் கிடைக்கிறது. ஆனால், யமஹா தயாரித்து வரும் புதிய பைக் ரூ.27,500 என்ற விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த புதிய பைக்கின் எஞ்சின் திறன் உள்ளிட்ட பிற விபரங்களை அந்த நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2012, 13:41 [IST]
English summary
Japanese two wheeler maker Yamaha Motors has announced that they are developing a new motorcycle which when launched, will become the cheapest motorcycle in the world. Yamaha is developing this new motorcycle for motorcycle buyers in Africa and India, where demand for low-cost motorized two wheeler vehicles is increasing exponentially.
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+