லிமிடேட் எடிசன் யமஹா ஆர்-15: 100 பைக்குகளுக்கு மட்டுமே புக்கிங்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 2 புதிய வண்ணங்களில் ஆர்-15 பைக்கை யமஹா பார்வைக்கு வைத்திருந்தது. இந்த புதிய பைக்குகள் பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியது.
இந்த நிலையில், புதிய வண்ணங்களில் ஆர்-15 பைக்குகளுக்கான புக்கிங்கை யமஹா துவங்கியுள்ளது. உலக மோட்டோ ஜிபியில் பங்கேற்று 50 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த லிமிடேட் எடிசன் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருவதாக யமஹா தெரிவித்துள்ளது.
டபிள்யூஜிபி 50வது நிறைவுவிழா எடிசன் மற்றும் ஃபியரி ரெட் வண்ணத்தில் ஸ்பெஷல் எடிசன் ஆர்-15 ஸ்போர்ட்ஸ் பைக்கையும் தற்போது யமஹா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
ஆர்-15 வி 2.0 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு பைக்குகளும் முறையே 1.11 லட்சம் மற்றும் 1.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








