புதிய 250சிசி பைக்கை களமிறக்க யமஹா திட்டம்: யாருக்கு நெருக்கடி?

By Saravana
Yamaha YSF R15
200சிசி மற்றும் 250 சிசி மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் பைக்குகளின் மார்க்கெட்டை உடைக்கும் வகையில் புதிய 250சிசி பைக்கை களமிறக்க யமஹா திட்டமிட்டுள்ளது.

நம் நாட்டு மார்க்கெட்டில் 200சிசி மற்றும் 250சிசி பைக்குகளின் விற்பனை நன்கு வளர்ந்து வருகிறது. ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டில் முக்கிய இடம் வகிக்கும் யமஹா தற்போது 150சிசி பைக் செக்மென்ட் வரை ஓரளவு வலுவான நிலையில் இருக்கிறது.

இதை விட்டால் யமஹாவிடம் உயர் ரகங்கள்தான் கையில் இருக்கின்றன. இந்த குறையை போக்கும் வகையில் இனி 150+ செக்மென்ட்டிலும் கவனம் செலுத்தப் போவதாக யமஹா தெரிவித்துள்ளது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆர்15 வரிசையில் புதிய ஆர்25 பைக்கை இந்திய மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை யமஹா மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய பைக் வரும்பட்சத்தில், புதிய பல்சர் 200என்எஸ், கேடிஎம் டியூக் 200 மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகளுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும். மேலும், இந்த புதிய பைக்குக்கு உள்நாட்டிலேயே உதிரிபாகங்களை பெற யமஹா முடிவு செய்துள்ளதால் விலையும் சவாலாக இருக்கும் நிர்ணயிக்க முடியும்.

ஸ்பிளிட் இருக்கைகள், லிக்யூடு கூல்டு எஞ்சின், அரக்கத்தனமான முகப்பு என பார்த்தவுடன் வாங்கத்தூண்டும் அம்சங்களுடன் இந்த புதிய பைக் வர இருப்பதால் நிச்சயம் 200 சிசி முதல் 250சிசி வரையிலான மார்க்கெட்டில் முக்கிய இடம் பிடிக்கும் என யமஹா கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 17, 2012, 12:44 [IST]
English summary
two wheeler maker Yamaha is planning to launch new 250cc bike in Indian market. The bike will give tough competition to Bajaj Pulsar 200NS and Honda CBR 250R bikes.
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+