யமஹா ஆர்15 2.0 ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு சிறந்த வடிவமைப்பு விருது

இந்திய வடிவமைப்பு கழகமும், ஜப்பானை சேர்ந்த வடிவமைப்பு மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து சிறந்த மோட்டார்சைக்கிள் வடிவமைப்புக்கான விருது போட்டியை நடத்தின.
இதில், 71 பைக் மாடல்கள் போட்டியிடுவதற்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதில், 31 மாடல்கள் மார்க் 1 என்ற முதல் தர வடிவமைப்புக்கான அங்கீகாரத்தை பெற்றன.
இதில், யமஹா ஆர்15 2.0வெர்ஷன் பைக் சிறந்த வடிவமைப்புக்கான விருதை பெற்றுள்ளது. 150 சிசி செக்மென்ட்டில் பிரிமியம் பைக்காக வலம் வரும் ஆர்15 தனது ஸ்போர்ட்டி வடிவமைப்பால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மார்க் 1 வடிவமைப்பு விருதை யமஹா ஆர்12 2.0 பெற்றது குறித்து யமஹா சிஇஓ ஹிரோயுகி சுஸுகி கூறுகையில்," ஆர்15 பைக்குக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது எங்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்குக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விருது மூலம் அந்த சந்தோஷம் இரட்டிப்பாகியிருக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications








