இந்தியாவில் முதல் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்த யமஹா

ரூ.46,000 என்ற சவாலான ஆரம்ப விலையில் தனது முதல் ரே ஸ்கூட்டரை சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது யமஹா.

ஜதராபாத்தில் நடந்த வண்ணமிகு விழாவில் யமஹா நிர்வாக இயக்குனர் ஹிரோயுகி சுஸுகி மற்றும் ரே ஸ்கூட்டரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் இந்த புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்தனர்.

யமஹா ரே ஸ்கூட்டர்

125 சிசி எஞ்சினுடன் வர இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ரே ஸ்கூட்டரில் 113 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 7.1 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். ரே ஸ்கூட்டருக்கு 2 ஆண்டுகள் அல்லது 24,000 கிமீ வாரண்டியை வழங்குவதாக யமஹா தெரிவித்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்சஸ் ஆகிய வெற்றிகரமான ஜப்பானிய ஸ்கூட்டர்கள் வரிசையில் முத்திரை பதிக்க யமஹாவின் ரே ஸ்கூட்டரும் இன்று களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டர் டிவிஎஸ் பெப்+, ஹோண்டா டியோ ஹீரோ பிளஷர் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியை கொடுக்கும்.

ரூ.46,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் யமஹா ரே விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 14, 2012, 12:59 [IST]
English summary
India Yamaha Motor has finally entered the Indian scooter market by launching the new Ray scooter at a glittering event in Hyderabad. Yamaha's first scooter in India is available with a starting price of Rs.46,000 (ex-showroom price Delhi).
மேலும்... #yamaha #ray #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+