சென்னையில் யமஹா ஸ்கூட்டர் சோதனை: விரைவில் மார்க்கெட்டுக்கு வருகிறதா?

நம் நாட்டு ஸ்கூட்டர் மார்க்கெட் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஹோண்டா மற்றும் சுஸுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன.
எனவே, மற்றொரு ஜப்பானிய நிறுவனமான யமஹாவும் விரைவில் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதில் முதல் மாடலாக ரே என்ற புதிய 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.
டெல்லி கண்காட்சியிலேயே இந்த ஸ்கூட்டர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஸ்கூட்டரின் சாலை ஓட்ட சோதனைகள் சென்னையில் சமீபத்தில் நடந்துள்ளது. மொத்தம் 4 ஸ்கூட்டர்கள் சென்னையில் வைத்து சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
யமஹா ரே ஸ்கூட்டர் யுவதிகளை மட்டுமின்றி இளைஞர்களையும் வெகுவாக கவரும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மார்க்கெட்டில் வெகு சீக்கிரமே முக்கிய இடத்தை பிடித்துவிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








