கடந்த மாதம் யமஹா பைக் விற்பனை 23% அதிகரிப்பு

ஜப்பானிய நிறுவனமான யமஹாவின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இந்தியாவில் தனி மவுசு இருக்கிறது. அதிரடியான பிக்கப், மிரட்டும் வடிவமைப்பு காரணமாக இளசுகளை கட்டிப்போட்டு வைத்துள்ளன யமஹா பைக்குகள்.
இதனால், யமஹாவின் பைக் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. கடந்த மாதம் மொத்தம் 40,655 பைக்குகளை யமஹா விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடுகையில்,(33,046 பைக்குகள்) விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மார்க்கெட்டில் 27,050 பைக்குகளையும், 13,605 பைக்குளை ஏற்றுமதியும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது யமஹா. மேலும், தனது ஆர்-15, எஸ்இசட், எப்இசட் வரிசை பைக்குகளுக்கான மவுசு நாளுக்கு நாள் எகிறி வருவதாகவும் அந்த நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








