2011ல் எப்இசட், எஸ்இசட் பைக்குகளால் யமஹா விற்பனை ஜோர்

Yamaha SZ R
கடந்த ஆண்டு எப்இசட் மற்றும் எஸ்இசட் பைக்குகளின் விற்பனை கணிசமாக உயர்ந்ததால், நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது யமஹா.

இளைஞர்கள் மத்தியில் யமஹா பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, எப்இசட் மற்றும் எஸ்இசட் பைக்குகளுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

இதனால், கடந்த ஆண்டு நல்ல விற்பனை வளர்ச்சியை யமஹா பதிவு செய்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் மொத்தம் 3,50,274 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த ஆண்டு 4,60,815 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

இதை ஒப்பிடுகையில் விற்பனை 31.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், கடந்த டிசம்பரில் மட்டும் அந்த நிறுவனம் 44,976 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்தது. கடந்த 2010ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடுகையில் இது 29 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், தனது போர்ட்போலியோவை விரிவுப்படுத்திக்கொள்ளும் வகையிலும் புத்தம் புது ஸ்கூட்டரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 3, 2012, 12:06 [IST]
English summary
Japanese two wheeler maker Yamaha reported that it was recorded 31 % growth in Last year. The company said FZ and SZ motorcycles are high demand in Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+