யமஹா ரே ஸ்கூட்டரின் விளம்பர தூதராக தீபிகா படுகோனே நியமனம்
ஸ்கூட்டர் வரிசைக்கான விளம்பர தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை நியமித்துள்ளது யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.
ரே ஸ்கூட்டர் மூலம் முதன்முறையாக இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விரைவில் அடியெடுத்து வைக்க உள்ளது யமஹா. ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுவதால், தனது புதிய ரே ஸ்கூட்டரை வெகுவாக பிரபலப்படுத்த சினிமா நட்சத்திரத்தை வைத்து பிரபலபடுத்த அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது.

குறிப்பாக, டிவி விளம்பரங்கள் மூலம் யுவதிகளை வளைக்க அந்த நிறுவனம் கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதற்காக, தற்போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனைவை விளம்பர தூதராக்கியிருக்கிறது யமஹா.
ஆட்டோமொபைல் துறையில் முதன்முறையாக தற்போது தீபிகா விளம்பர தூதராகியிருக்கிறார். மும்பையில் இதற்கான நிகழ்ச்சியில் பேசிய யமஹா சிஇஓ ஹிரோயுகி சுஸுகி கூறுகையில்," ஸ்கூட்டர் வரிசைக்கு தீபிகாவை விளம்பர தூதராக்கியதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.
இளம் வாடிக்கையாளர்களை தீபிகா மூலம் கவர முடியும் என்று நம்புகிறோம். எங்களது புதிய ரே ஸ்கூட்டர் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களுடன் இருக்கும்," என்றார்.
ரே ஸ்கூட்டரை வைத்து யமஹா ஒளிபரப்பும் டிவி விளம்பரங்களில் தீபிகா தோன்றுவார். இதேபோன்று, யமஹா மோட்டார்சைக்கிள்களுக்கான விளம்பர தூதராக ஜான் ஆபிரஹாம் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








