3 புதிய வண்ணங்களில் மயக்கும் யமஹாவின் எஸ்இசட் பைக்குகள்

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் மனதை மயக்கும் 3 புதிய வண்ணங்களில் எஸ்இசட்-எக்ஸ் மற்றும் எஸ்இசட்-ஆர் பைக்குகளை யமஹா அறிமுகம் செய்துள்ளது. இதில், எஸ்இசட்-ஆர் பைக் குவாலிட்டி ரெட், குவாலிட்டி பிளாக் மற்றும் குவாலிட்டி ஒயிட் ஆகிய புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, எஸ்இசட்-எக்ஸ் பைக் ரெட்,பிளாக் மற்றும் சில்வர் ஆகிய 3 புதிய வண்ணங்களி்ல் மார்க்கெட்டிற்கு வந்துள்ளன. மேலும், பஜாஜ் டிஸ்கவர் 150, சுஸுகி ஜிஎஸ்ஆர்-150ஆர் மற்றும் ஹோண்டா யூனிகார்ன் ஆகிய பைக்குகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் எஸ்இசட்-ஆர் பைக் 153 சிசி எஞ்சினுடன் முன்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வசதியுடன் கிடைக்கிறது.
புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ்இசட் வரிசை பைக்குகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அதே விலையில் கிடைக்கும் என்றும் யமஹா தெரிவித்துள்ளது. எஸ்இசட்-எக்ஸ் ரூ.56,500 விலையிலும், எஸ்இசட்-ஆர் பைக் ரூ.63,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








