கோவாவில் 2-வது பைக் வீக் திருவிழா பற்றிய கூடுதல் விபரங்கள்

By Saravana

அடுத்த மாதம் கோவாவில் நடைபெற இருக்கும் 2வது இந்தியா பைக் வீக் திருவிழா பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஸ்டர்கிஸ் மோட்டார்சைக்கிள் ராலி பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இந்த பைக் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பைக் பிரியர்களுக்காக கூடுதல் தகவல்களை இங்கே வழங்குகிறோம்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

சிறப்பு நிகழ்ச்சிகள்

அடுத்த மாதம் 17, 18ந் தேதி கோவாவில் நடைபெற இருக்கும் இந்த பைக் திருவிழாவில் பைக்குகளின் அணிவகுப்பு, பைக் ஸ்டன்ட், இரவு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

கண்காட்சி

கண்காட்சி

வரும் ஜனவரியில் நடைபெறும் இந்த 2-வது கண்காட்சியில் போர் விமான எஞ்சின் பொருத்தப்பட்ட ரேடியல் சாப்பர் கஸ்டம் பைக் உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக பைக் மாடல்களும், விண்டேஜ் மாடல்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

பைக் கிளப் வளாகம்

பைக் கிளப் வளாகம்

பைக் கிளப்புகளை சேர்ந்தவர்கள் அளவளாவிக் கொள்வதற்கு வசதியாக சிறப்பு வளாகம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

பிரபலங்கள்

பிரபலங்கள்

மோட்டார்சைக்கிளில் உலகை வலம் வந்து சாதனைகள் புரிந்த டெட் சைமன், நிக் சான்டர் உள்ளிட்ட பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

 இசை நிகழ்ச்சிகள்

இசை நிகழ்ச்சிகள்

இங்கிலாந்தின் அஃப்ரோபீட், உள்பட 20 பிரபல பேண்ட் இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் 3 மேடைகளில் நடைபெற உள்ளன. இது பைக் ரைடர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பாக அமையும்.

சிறப்பு முகாம்கள்

சிறப்பு முகாம்கள்

பைக் திருவிழா நடைபெறும் வளாகத்தில் எம்ஆர்எஃப் டயர் நிறுவனம் சிறப்பு டயர் பரிசோதனை முகாமை நடத்த உள்ளது. இதேபோன்று, கேஸ்ட்ரால் ஆயில் நிறுவனமும் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆக்சஸெரீஸ்கள் கண்காட்சியும் நடக்கிறது.

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் பைக் ரைடர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.

சிறப்பு அணிவகுப்பு

சிறப்பு அணிவகுப்பு

டெல்லி, ஜம்மு, மும்பை மற்றும் பெங்களூரிலிருந்து பைக் அணிவகுப்புகளை இந்தியா பைக் வீக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஃபேஸ்புக் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தவிர, கொங்கன் கடற்கரை சாலையில் சிறப்பு பைக் அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட தூரம் பைக் ஓட்டி வந்து விழா நடைபெறும் இடத்திற்கு வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் காத்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2013, 12:55 [IST]
English summary
India Bike Week returns on 17-18, January 2014 to Vagator, Goa. Woodstock of biking festival gears up for bikers, music and entertainment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+