இந்தியா வரும் இந்தியன் பிராண்டின் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

அடுத்த ஆண்டு இந்தியா வரும் இந்தியன் பிராண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அமெரிக்காவின் ஸ்டர்கிஸ் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. போலரிஸ் தலைமைக்கு கீழ் வந்துள்ள இந்த பிராண்டு தற்போது மறுபிறப்பு எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த அமெரிக்கன் பிராண்டு கால் பதிக்க இருக்கிறது. 1.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்தியன் சீஃப் என்ற ஒரேயொரு மோட்டார்சைக்கிள்களை மூன்று விதமான வேரியண்ட்களில் இந்தியன் பிராண்டு விற்பனை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியா வரும் இந்தியன் சீஃப் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய 1.8 லி எஞ்சின்

புதிய 1.8 லி எஞ்சின்

2014 மாடல் இந்தியன் சீஃப் மோட்டார்சைக்கிள்களில் புத்தம் புதிய தன்டர்ஸ்ட்ரோக் 111 என்ற பெயர் கொண்ட 1819சிசி வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 161 என்எம் டார்க்கை அளிக்கும் என்பதுதான் இதன் விசேஷ அம்சம். இந்த எஞ்சினை 3 மில்லியன் கிலோமீட்டர் சோதனை செய்துள்ளதாக போலரிஸ் தெரிவித்துள்ளது.

இந்தியன் கிளாஸிக் சீஃப்

இந்தியன் கிளாஸிக் சீஃப்

இது பேஸ் மாடல். இது இந்திய மதிப்பில் ரூ.11.66 லட்சம் விலை கொண்டது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

அனைத்து இந்தியன் சீஃப் மோட்டார்சைக்கிள்களிலும் பெட்ரோல் டேங்கில்தான் இன்ஸ்ட்ரூமென்ட் பொருத்தப்பட்டிருக்கும்.

சிறப்புகள்

சிறப்புகள்

எலக்ட்ரிக் ஸ்டார்ட் பட்டன், கீ லெஸ் இக்னிஷன், ஏபிஎஸ், குரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

 இந்தியன் சீஃப் விண்டேஜ்

இந்தியன் சீஃப் விண்டேஜ்

சாஃப்ட் பேகர் என்று அழைக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிள் இந்திய மதிப்பில் ரூ.12.89 லட்சம் விலை கொண்டது.

 அலங்காரம்

அலங்காரம்

இருக்கை, பெட்டி ஆகியவை லெதர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் இந்த மாடல் மிக கவர்ச்சியாக இருக்கும்.

இந்தியன் சீஃப் சீஃப்டெயின்

இந்தியன் சீஃப் சீஃப்டெயின்

இதுதான் டாப் வேரியண்ட். ஃபேர்டு ஹார்டு பேகர் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட தூர பயணங்களுக்கான சிறப்பு வசதிகள் கொண்ட இந்த பைக் இந்திய மதிப்பில் ரூ.14.12 லட்சம் விலையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

சீஃப்டெயின் மோட்டார்சைக்கிளில் ரிமோட் லாக், புளூடூத் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகளை கொண்டது.

அடுத்த ஆண்டு இந்தியாவில்...

அடுத்த ஆண்டு இந்தியாவில்...

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் உலக அளவில் பல்வேறு மார்க்கெட்டுகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியன் பிராண்டு மோட்டார்சைக்கிள்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

ஹார்லிக்கு போட்டி

ஹார்லிக்கு போட்டி

ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் மோட்டார்சைக்கிளுக்கு இந்த இந்தியன் சீஃப் சீஃப்டெயின் நேரடி போட்டியாளராக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 7, 2013, 11:58 [IST]
English summary
The oldest U.S motorcycle brand and a true American, the iconic Indian Motorcycles has made a comeback. Under the guidance of Polaris, its new owners, the 2014 Indian Motorcycles lineup was unveiled at the annual motorcycle event at Sturgis, U.S.A.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+