2014 கவாஸாகி இசட் 1000 சூப்பர் பைக் அறிமுகம் - முழு விபரம்

By Saravana

மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கவாஸாகியின் புதிய இசட்1000 சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. நின்ஜா 1000 சூப்பர் பைக்கின் நேக்டு வெர்ஷனான இந்த புதிய பைக் மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, ஹெட்லைட் மிக மிக மிரட்டலாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய பைக் தயாரிப்பு நிறுவனங்கள் பார்ப்பவர்களை மிரள வைக்கும் விதத்தில் சுகோமி என்ற டிசைன் தாத்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட பைக்குகளை வடிவமைக்கின்றன. அதே டிசைன் தாத்பரியத்தில் இந்த பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஹெட்லைட் டிசைன் புதுமையாக இருப்பதோடு, எல்இட விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் விசேஷமாக கூறலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

140 எச்பி பவரையும், 111 என்எம் டார்க்கையும் வழங்கும் 1043சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் பல வகைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சிலிண்டர்களின் உராய்வுத் தன்மை மிக குறைவாக இருக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

இசியூ செட்டிங்

இசியூ செட்டிங்

இந்த பைக்கின் இசியூ எனப்படும் எஞ்சின் கட்டுப்பாட்டு நுட்பத்திலும் பலவிதமான புதுமைகளை கவாஸாகி புகுத்தியுள்ளது.

 பிரேக்

பிரேக்

டோக்கிகோ கிரிப்பிங் பெட்டல் பிரேக் டிஸ்க்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் ஷோவா பிங் பிஸ்டன் போர்க்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் பைக்கின் கையாளுமை மிகச் சிறப்பாக இருக்கும் என கவாஸாகி கூறுகிறது.

 எடை

எடை

பல வகைகளில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சூப்பர் பைக் 221 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கோல்டன் பிளேஸ்டு க்ரீன், மெட்டாலிக் கிராஃபைட் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் என கவாஸாகி தெரிவித்துள்ளது.

விலை

விலை

2014 கவாஸாகி இசட்100 பைக் 11,999 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மாடலைவிட 1,000 கூடுதல் விலையில் இந்த பைக் வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 8, 2013, 12:01 [IST]
English summary
The Kawasaki Z1000 is a monster in every way you look at it. For 2014 the massive naked version of the Ninja 1000 comes with a bevy of upgrades and a few prominent styling changes which will either make you stand in awe, admiring the bike or hate it outright. For our part, we love it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+