ஹீரோவின் பார்ட்னருக்கு ஹைபிரிட் டூ வீலருக்கான காப்புரிமை!

By Saravana

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் ரேஸிங் நிறுவனம் ஹைபிரிட் இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக டிசைன் மற்றும் தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை பெற்றுள்ளது.

இதன்மூலம், எரிக் புயெல் நிறுவனத்தின் பாதி பங்குகளை வசப்படுத்தியிருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு ஹைபிரிட் ஸ்கூட்டர் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஹைபிரிட் நுட்பம்

ஹைபிரிட் நுட்பம்

பெட்ரோல் எஞ்சின் நேரடியாக சக்கரத்தை இயக்காமல், ஜெனரேட்டரை மட்டும் இயக்கும். அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து மின் மோட்டார் மூலம் ஸ்கூட்டர் இயங்கும். இந்த தொழில்நுட்பத்துக்குத்தான் எரிக் புயெல் காப்புரிமை பெற்றுள்ளது.

மின் மோட்டார்

மின் மோட்டார்

பேட்டரியிலிருந்து மட்டுமல்லாது, ஆர்பிஎம் அதிகமாகும்போது தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை நேரடியாக ஜெனரேட்டலிருந்து மின் மோட்டார் எடுத்துக் கொள்ள முடியும். இதற்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

எரிபொருள் டேங்க்

எரிபொருள் டேங்க்

பெட்ரோல் டேங்க்கை தனியாக அமைக்காமல் ஃபிரேமுக்குள் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும். இதன்மூலம், எரிபொருள் டேங்க் பொருத்துவதற்கான இடம், செலவீனம் மிச்சமாகும். இதுபோன்று ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் ஃபிரேமுக்குள் 2 லிட்டர் முதல் 15 லிட்டர் வரையிலான பெட்ரோலை நிரப்ப முடியும்.

400 எச்பி ஆற்றல்

400 எச்பி ஆற்றல்

முதல்கட்டமாக பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் 200 எச்பி திறன் கொண்ட ஹைபிரிட் இருசக்கர வாகனங்களை வடிவமைக்க முடியும். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் 400 எச்பி திறன் கொண்ட ஹைபிரிட் இருசக்கர வாகன மாடல்களை வடிவமைக்க வாய்ப்பு உள்ளதாக எரிக் புயெல் தெரிவித்துள்ளது.

ஹீரோ லீப்

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் லீப் என்ற ஹைபிரிட் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த ஸ்கூட்டரில் எரிக் புயெலின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹீரோ அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 14, 2013, 11:46 [IST]
English summary
Proof of fact is Erik Buell Racing. The small company which is headed by the talented Erik Buell, who now has the world's largest motorcycle manufacturer, Hero MotoCorp as a partner. Erik Buell Racing recently won a patent for a hybrid scooter/motorcycle. Hero Leap electric hybrid scooter concept is the first thing that is coming to our mind.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+