டிஸ்கவர் வரிசையில் புதிய 100சிசி பைக்கை களமிறக்கிய பஜாஜ்

டிஸ்கவர் 100டி என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பைக் 100சிசி மார்க்கெட்டில் கொஞ்சம் காஸ்ட்லியானதாக இருக்கும். இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 10.6 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
மார்க்கெட்டில் இருக்கும் பிற 100சிசி பைக்குகளுடன் ஒப்பிடுகையில், இது 30 சதவீதம் கூடுதலான பவரை வெளிப்படுத்தும் பைக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பைக் தோற்றத்தில் பஜாஜ் ஆட்டோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்த டிஸ்கவர் 125எஸ்டி பைக்கை ஒத்ததாகவே உள்ளது. ஆனால், டிஸ்கவர் 100டி பைக்கில் மோனோ சஸ்பென்ஷன் இல்லை.
இந்த புதிய பைக் ரூ.50,500 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. ஹீரோவின் பேஷன் ப்ரோ, ஹோண்டாவின் ட்ரீம் யுகா பைக்குகளுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








