புதிய க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் ஆட்டோ
க்ரூஸர் பைக்குகளுக்கு அதிகரித்து வரவேற்பை கருதி, புத்தம் புதிய க்ரூஸர் பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய பைக் திட்டத்தை பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் உறுதி செய்துள்ளார்.

ஓல்டாகிய அவென்ச்சர்
பஜாஜ் ஆட்டோ தற்போது விற்பனை செய்து வரும் அவென்ச்சர் மார்க்கெட்டிற்கு வந்து நீண்ட காலமாகிவிட்டது. மேலும், இந்த பைக்கை பஜாஜ் கண்டுகொள்ளவில்லை.

குறைந்த விலை க்ரூஸர்
மார்க்கெட்டில் தற்போது குறைந்த விலை க்ரூஸர் பைக் மாடலாக அவென்ச்சர் இருக்கிறது. இந்த பைக்கில் 19.03 பிஎஸ் பவரை தரும் 219.89சிசி டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

போட்டி
டிஸ்கவர் மற்றும் பல்சர் பைக்குகளின் மீதே பஜாஜ் ஆட்டோ கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அடியெடுத்து வைத்துள்ளதால் போட்டியை சமாளிக்கும் விதமாக புதிய க்ரூஸர் பைக்கை பஜாஜ் அறிமுகம் செய்ய உள்ளது.

அறிமுகம்
புதிய க்ரூஸர் பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

புதிய மாடல்கள்
புதிய க்ரூஸர் பைக் மாடல்கள் தவிர டிஸ்கவர் வரிசையில் ஒரு புதிய மாடலையும், பல்சர் பிராண்டில் 200எஸ்எஸ் மற்றும் 375 ஆகிய இரண்டு புதிய மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளது பஜாஜ் ஆட்டோ.


Click it and Unblock the Notifications








