பஜாஜின் புதிய டிஸ்கவர் 100டி பைக்கின் சிறப்பம்சங்கள்
நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த எஞ்சினுடன் புதிய 100சிசி பைக்கை பஜாஜ் ஆட்டோ நேற்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பவர்ஃபுல் பைக்கை வாங்க விரும்பும் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த பைக் வந்துள்ளது.
ரூ.50,500 விலையில் உயர்ரக 100சிசி பைக்காக டிஸ்கவர் வரிசையில் வந்திருக்கும் இந்த புதிய பைக் நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும். பஜாஜின் புதிய டிஸ்கவர் 100டி பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தோற்றம்
தோற்றத்தில் டிஸ்கவர் 125எஸ்டி பைக்குக்கும் இந்த புதிய பைக்குக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. பார்ப்பதற்கு ஸ்டைலான 100சிசி பைக்காக வந்துள்ளது.

எஞ்சின்
100 சிசி மார்க்கெட்டில் 4 வால்வுகளுடன் டிடிஎஸ்-ஐ தொழில்நுட்பம் கொண்ட முதல் பைக் இதுதான். இந்த பைக்கில் 10.2 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 100சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பவர்ஃபுல் 100சிசி பைக்
மார்க்கெட்டில் தற்போதைய பவர்ஃபுல் 100சிசி பைக் டிஸ்கவர் 100டி பைக்தான். பிற 100சிசி பைக்குகளுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் கூடுதல் பவரை கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்
டிஸ்கவர் வரிசை பைக்குகள் மைலேஜுக்கு கியாரண்டி கொடுத்து வருகின்றன. அராய் சான்றுபடி இந்த பைக் லிட்டருக்கு 87 கிமீ மைலேஜ் தரும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

விலை
ரூ.50,500 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு விட்டுள்ளது. கருப்பு, சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு, நீல வண்ணக் கலவை கொண்டதாக 4 வண்ணங்களில் கிடைக்கும்.

125எஸ்டி vs 100டி
டிஸ்கவர் 125எஸ்டி பைக்கில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. 125எஸ்டி பைக்கில் முன்புறம் பெட்டல் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பைக்கில் இருபுறமும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.(படத்தில் டிஸ்கவர் 125எஸ்டி)


Click it and Unblock the Notifications








