ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மீண்டும் நுழையும் பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோவின் வரலாற்றிலும், வளர்ச்சியில் ஸ்கூட்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மார்க்கெட்டில் ஸ்கூட்டர்களுக்கான மவுசு திடீரென குறைந்ததையடுத்து மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் களமிறங்கி இன்று மார்க்கெட்டின் முக்கிய சக்தியாக மாறிவிட்டது.

மேலும், ஸ்கூட்டர் தயாரிப்பையும் முழுமையாக கைவிட்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், ஸ்கூட்டர் மார்க்கெட் அதீத வளர்ச்சி பெற்று வருவதால் மீண்டும் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் களமிறங்கும் எண்ணம் இருக்கிறதா? என்று ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் பஜாஜ் ஆட்டோ தலைவரிடம் கேள்வி கேட்கப்படுவது வாடிக்கை. ஆனால், ஸ்கூட்டர் தயாரிக்கும் எண்ணமே இல்லை என்று அவர் மறுத்து வந்தார்.

இந்த நிலையில், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோ மீண்டும் களமிறங்க இருப்பதாக உறுதியாகியிருக்கிறது. கிறிஸ்டல் என்ற பெயரில் புதிய 100 சிசி ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு கிறிஸ்டல் என்ற ஸ்கூட்டரை பஜாஜ் அறிமுகம் செய்தது. ஆனால், விற்பனை சரி இல்லாததால் உற்பத்தியை நிறுத்தியது.

இந்த நிலையில், கிறிஸ்டல் பிராண்டில் மீண்டும் புதிய ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது பஜாஜ். டிடிஎஸ்ஐ எஞ்சினுடன் வரும் இந்த புதிய ஸ்கூட்டரின் படங்கள் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 உயர் தொழில்நுட்பம்

உயர் தொழில்நுட்பம்

ஸ்கூட்டர் மார்க்கெட்டிலேயே புதிய கிறிஸ்டல் உயர்ரக தொழில்நுட்பம் கொண்ட ஸ்கூட்டராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பஜாஜ் வடிவமைத்து வருகிறது.

 டிடிஎஸ்ஐ எஞ்சின்

டிடிஎஸ்ஐ எஞ்சின்

பஜாஜ் ஆட்டோவின் பிரத்யேக டிடிஎஸ்ஐ தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் இந்த புதிய ஸ்கூட்டர் வருகிறது. இனி வரும் காலங்களில் பஜாஜ் ஆட்டோவின் அனைத்து தயாரிப்புகளுமே டிடிஎஸ்ஐ எஞ்சினுடன்தான் வரும்.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

கிறிஸ்டல் ஸ்கூட்டரில் 7.2 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 95சிசி டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

சோதனை ஓட்ட நிலைகளில் மட்டுமல்ல, நடைமுறை ஓட்டத்தில் கூட கிறிஸ்டல் லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் தரும் என பஜாஜ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் டேங்க் மூடி

பெட்ரோல் டேங்க் மூடி

இருக்கையை திறக்காமலேயே பெட்ரோல் டேங்க் மூடியை திறக்கும் வசதி இருக்கும். மேலும், இருக்கைக்கு கீழே அதிக பொருட்களை வைக்கும் இடவசதியை கொண்டிருக்கும்.

பென்ட்டா லாக் சிஸ்டம்

பென்ட்டா லாக் சிஸ்டம்

பென்ட்டா லாக் சிஸ்டம் கொண்டிருப்பதால் சாவியை ஒரு திருகு அழுத்தம் கொடுத்தவுடன் பெட்ரோல் டேங்க் மூடி திறந்து கொள்ளும். இது மிகச்சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட லாக்கிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

இருள் சூழ்ந்தால் தானியங்கி முறையில் எரியும் ஹெட்லைட்டுகள், ட்வின் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் ஆகியவை கூடுதல் அம்சங்கள்.

 டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்

டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்

இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், பியூல் கேஜ், பேட்டரி இன்டிகேட்டர் ஆகியவை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ சோக்

ஆட்டோ சோக்

எஞ்சின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கு கீழே குறைந்தால் உடனடியாக தானியங்கி முறையில் ஆட்டோ சோக் ஆன் ஆகிவிடும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும். இதேபோன்று, பராமரிப்பு அவசியமில்லாத நவீன பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

படத்தில் பஜாஜின் புதிய கிறிஸ்டல் ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 12, 2013, 11:33 [IST]
English summary
Bajaj Auto is reportedly developing a new automatic scooter named as the Kristal.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+