சூப்பர் பைக்குகளை களமிறக்கும் பஜாஜ் - கவாஸாகி கூட்டணி
மாஸ் மார்க்கெட்டில் கைவிட்ட இரண்டாம் இடத்தை பிடிப்பதற்கு மல்லுக்கட்டி நிற்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மறுபுறம் பெர்ஃபார்மென்ஸ் பைக் மார்க்கெட்டில் தனது கரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தனது ஜப்பானிய பார்ட்னரான கவாஸாகி பிராண்டில் சூப்பர் பைக்குகளை விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கு பஜாஜ் திட்டமிட்டுள்ளது. கவாஸாகியின் இசட்எக்ஸ் 10ஆர் மற்றும் இசட்எக்ஸ் 14ஆர் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் விரைவில் களமிறக்குகிறது பஜாஜ்.

ரூ.15 லட்சம் விலை பட்டியலில் வரும் இந்த பைக்குகள் தோற்றத்திலும், பெர்ஃபார்மென்ஸிலும் கலக்கலாக இருக்கும். கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் பைக்கில் 200 எச்பி ஆற்றலையும் 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.
இசட்எக்ஸ் 14 ஆர் பைக்கில் 200 எச்பி ஆற்றலையும், 163 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1441 சிசி எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கும். இதில், இசட்எக்ஸ் 14ஆர் பைக் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் டூரர் பைக் ரகத்தை சேர்ந்தது.

இந்த பைக்குகள் மணிக்கு 300 கிமீ டாப் ஸ்பீடு கொண்டது. டிராக்ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பர், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும்.
பஜாஜ் ஆட்டோவின் புரோபைக்கிங் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும். மேலும், இறக்குமதி செய்து இந்த பைக்குகளை விற்பனை செய்ய பஜாஜ் ஆட்டோ - கவாஸாகி கூட்டணி முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








