பல்சர் பைக்குகளுக்கு குறைந்த முன்பணத்துடன் சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்
மிகக் குறைந்த முன்பணத்தை கட்டி பல்சர் பைக்குகளை ஓட்டிச் செல்லும் வாய்ப்பை பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது. இதுதவிர, குறைந்த வட்டி மூலம் பண சேமிப்பு கடன் திட்டத்தையும் சேர்த்து அறிவித்துள்ளது.
பல்சர் 135 பைக்குக்கு ரூ.7047 முன்பணமாக செலுத்தினால் போதுமானது. பைக்கை ஓட்டிச் செல்லலாம். இந்த கடன் திட்டத்தின் மூலம் ரூ.7,191 வரை வட்டியில் சேமிக்க முடியும். இதேபோன்று, மனம் கவர்ந்த பல்சர் 150 பைக்குக்கு ரூ.8,061 முன்பணமாக செலுத்தினால் போதுமானது. இந்த கடன் திட்டத்தின் மூலம் வட்டியில் ரூ.8,268 வரை சேமிக்க முடியும்.

பல்சர் 180 பைக்குக்கு ரூ.8,418 முன்பணமாக செலுத்த வேண்டும். மொத்தமாக வட்டியில் ரூ.8,651 வரை சேமிக்க முடியும். பல்சர் 220 பைக்குக்கு ரூ.9,368 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த சிறப்பு கடன் திட்டத்தின் மூலம் வட்டியில் ரூ.9,923 வரை சேமிக்க முடியும்.
கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த புதி பல்சர் 200 என்எஸ் நேக்டு ஸ்டைல் பைக்குக்கு ரூ.10,048 முன்பணம் செலுத்தினால் போதுமானது. இந்த கடன் திட்டத்தில் வட்டியில் மட்டும் ரூ.10,364 வரை சேமிக்க முடியும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், என்சிஆர் பகுதிகளில் மட்டும் இந்த சிறப்பு கடன் திட்டம் இந்த மாதம் முழுவதும் அமலில் இருக்கும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








