இரட்டை வண்ணத்தில் பல்சர் 200 என்எஸ் அறிமுகம்!
இரட்டை வண்ணக் கலவையுடன் புதிதாக 2 வண்ணங்களில் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் விற்பனைக்கு வந்துள்ளது. குறைந்த விலை கொண்ட சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்காக பல்சர் 200 என்எஸ் விளங்குகிறது.
சிவப்பு, நீலம், மஞ்சள் மற்றும் கருப்பு என 4 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், முதன்முறையாக, இரட்டை வண்ண ஸ்டிக்கர்களுடன் பல்சர் 200 என்எஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வண்ணங்கள்
வெள்ளை மற்றும் சிவப்பு கொண்ட இரட்டை வண்ண ஸ்டிக்கரிலும், சிவப்பில் வெள்ளை கோடுகள் கொண்ட மற்றொரு நிறத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை
இந்த இரட்டை வண்ண பல்சர் 200 என்எஸ் மாடல் ரூ.1,000 கூடுதலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை
இந்த மாத இறுதியில் ஷோரூம்களில் புதிய இரட்டை வண்ண பல்சர் 200 என்எஸ் விற்பனைக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
ட்ரிப்பிள் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட இந்த பைக்கில் 23.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199.5சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய மாடல்
முழுவதுமான ஃபேரிங் பேனல் பொருத்தப்பட்ட புதிய பல்சர் 200 எஸ்எஸ் என்ற புதிய பல்சரை விரைவில் பஜாஜ் அறிமுகம் செய்ய உள்ளது. பல்சர் 200 என்எஸ் பைக்கில் மாறுதல்கள் செய்யப்பட்ட மாடலாக புதிய பல்சர் எஸ்எஸ் வருகிறது. பஜாஜ் ஆட்டோவின் முதல் ஃபேர்டு வெர்ஷன் பைக்காக இது இருக்கும். பல்சர் 200 என்எஸ் பைக்கைவிட கூடுதல் பவர் கொண்டதாக இந்த மாடல் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








