மீண்டும் இணையதளங்களில் வெளியான புதிய பல்சர் படங்கள்
புதிதாக வர இருக்கும் ஃபேர்டு வெர்ஷன் பல்சரின் படங்கள் மீண்டும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. துல்லியம் குறைவாக இருந்தாலும் இந்த படங்கள் மூலம் புதிய பல்சரின் உண்மையான வடிவத்தை ஓரளவு தெரிந்து கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.
வைசர்டவுன் என்ற தளம் வெளியிட்டிருக்கும் இந்த படங்களின் மூலம் ட்வின் ஹெட்லைட், புரொஜெக்டர் விளக்குகள் உள்ளிட்டவை இருப்பது புலனாகிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும் என்பதுடன், விலையும் வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.



Click it and Unblock the Notifications








