3 புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தும் பஜாஜ் ஆட்டோ
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 3 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
கோயம்புத்தூரில் நடந்த பல்சர் ஸ்டன்ட் மானியா நிகழ்ச்சியில் பஜாஜ் ஆட்டோவின் சந்தைப்படுத்துதல் துறை மேலாளர் ஷ்யாம் சுந்தர் நாராயண் கலந்து கொண்டார். அப்போது, பிசினஸ் லைன் இதழுக்கு பேட்டியளித்த அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 3 புதிய மாடல்களை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம். அதில், ஒரு மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.
3 புதிய மாடல்களில் 2 மாடல்கள் பல்சர் வரிசையில் வருகின்றன. அதில், ஒன்று பல்சர் 200 மோட்டார்சைக்கிளின் ஃபேர்டு வெர்ஷனாக இருக்கும். இது பல்சர் 200 எஸ்எஸ் என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது.
அடுத்ததாக 375சிசி பல்சர் மாடலாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், அதிக பவர் கொண்ட பல்சர் மாடல் அடுத்த ஆண்டு தயாரிப்புக்கு செல்லாது என்று அவர் கூறியிருக்கிறார். மூன்றாவது மாடல் புதிய பல்சர் 150சிசி பைக்காக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








