புதிய ஏர்பேக்கை தயாரிக்க டெய்னிஸுடன் கூட்டு வைத்த பிஎம்டபிள்யூ

கார்களில் ஏர்பேக் எனப்படும் உயிர்காக்கும் காற்றுப்பைகள் தற்போது இன்றியமையாத பாதுகாப்பு அம்சமாக உள்ளது. அதுவும் தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் என்ட்ரி லெவல் கார்களில் கூட ஏர்பேக்குடன் கிடைக்கிறது. அதேவேளை, பைக் ஓட்டிகளுக்கான ஏர்பேக் தொழில்நுட்பம் இன்னும் அவ்வளவாக வர்த்தக ரீதியில் எளிதான விஷயமாக இல்லை.

மோட்டார்சைக்கிள் பந்தய வீரர்கள் மட்டும் தற்போது இதுபோன்ற ஏர்பேக்குகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பைக் ஏர்பேக்குகளை வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளுக்கு அடிகோலும் விதமாக பிரபல பைக் ஏர்பேக் தயாரிப்பு நிறுவனமான டெய்னிஸுடன் பிஎம்டபிள்யூ மோட்டோராட் உயர்ரக பைக் தயாரிப்பு நிறுவனம் கைகோர்த்துள்ளது.

 டி ஏர் சிஸ்டம்

டி ஏர் சிஸ்டம்

மோட்டோ ஜீபி பந்தய வீரர்களுக்கு டெய்னிஸ் நிறுவனம் டி ஏர் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான 15 மில்லி செகண்டில் விரிவைடயும் அதிநவீன காற்றுப் பைகளை தயாரித்து வழங்கி வருகிறது.

 பிஎம்டபிள்யூ ஏர்பேக்

பிஎம்டபிள்யூ ஏர்பேக்

இத்தாலியின் மிலன் நகரில் நவம்பரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ ஆட்டோமொபைல் திருவிழாவில், பிஎம்டபிள்யூ - டெய்னிஸ் கூட்டணியில் உருவாகும் புதிய ஏர்பேக் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. லெதர் உடையாக தயாரிக்கப்பட இருக்கும் இந்த புதிய ஏர்பேக்குக்கு டபுள்ஆர் ரேஸ்ஆர் என்று அழைக்கப்படும். அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தவுடன் இந்த புதிய ஏர்பேக் 2015ல் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாதாரண ஏர்பேக்

சாதாரண ஏர்பேக்

சாதாரண ரக பைக் ஏர்பேக்கின் ஒருமுனை பைக்குடனும், மறுமுனை லெதர் ஜாக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை, விபத்து ஏற்பட்டால் 300- 500 மில்லி செகன்ட்டில் விரிவடையும்.

 போலீஸ் துறையில்

போலீஸ் துறையில்

ஷார்ட்கமிங்ஸ் எனப்படும் சாதாரண ரக ஏர்பேக்குகளை பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பைக்குகளில் ரோந்து செல்லும் போலீசார் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை விரிவடையும் தொழில்நுட்பத்தில் நடைமுறை பிரச்னைகள் இருக்கின்றன.

நவீன ஏர்பேக்

நவீன ஏர்பேக்

டி ஏர் ஜாக்கெட் ஏர்பேக்குகளில் எலக்ட்ரானிக் சென்சார் மற்றும் காற்றழுத்த சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை 15 மில்லி செகண்டில் விரிவடைவதோடு, இந்த சென்சார்கள் மூலம் எடைக்கு தகுந்த அளவு பாதுகாப்பை வழங்கும். ஆனால், இவற்றின் விலை மிக அதிகம்.

பைக் ஏர்பேக்கை கண்டுபிடித்தவர்

பைக் ஏர்பேக்கை கண்டுபிடித்தவர்

மோட்டார்சைக்கிளுக்கான உயிர்காக்கும் காற்றுப் பையை 1976ல் ஹங்கேரியை சேர்ந்த தாமஸ் ஸ்ட்ராப் என்பவர்தான் கண்டுபிடித்தார்.

ஏர்பேக் செயல்பாடு - வீடியோ

ஏர்பேக் செயல்பாட்டினை விளக்கும் வீடியோவை ஸ்லைடரில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 22, 2013, 13:30 [IST]
English summary
BMW Motorrad is looking to change that by teaming up with motorcycle safety equipment major Dainese. The two have signed a long time contract under which several BMW Motorrad branded safety equipments will be developed and entered into production and a state of the art motorcycle airbag will be the first and primary product to be produced.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+