வித்தியாசமான பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் சைக்கிள்!
சுற்றுப்புற சூழலுக்கும், உடலுக்கும் உகந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிளை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ளது. சாதாரண சைக்கிள் போன்று இந்த எலக்ட்ரிக் சைக்கிளை காலால் பெடலை மிதித்தும் செல்லலாம். சோர்ந்து விட்டீர்கள் என்றால் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் பைக் போன்றும் செல்லலாம்.
இதற்காக இந்த சைக்கிளின் கிராங்க் சாஃப்ட்டுடன் எலக்ட்ரிக் மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. குரூஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிளை பெடலெக்(pedal+electric) என்ற தனது புதிய ரக போக்குவரத்து சாதனமாக பிஎம்டபிள்யூ குறிப்பிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் சைக்கிள்!
இந்த புதிய பெடலெக் சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி உள்ளிட்ட விபரங்களை பிஎம்டபிள்யூ வெளியிடவில்லை. பாஷ் நிறுவனத்தின் 250வாட் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் சைக்கிள்!
எலக்ட்ரிக் மோட்டாரை ஆன் செய்து செல்லும்போது 25 கிமீ வேகத்தில் போகலாம்.

பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் சைக்கிள்!
ஒருமுறை சார்ஜ் செய்தால் 80கிமீ தூரம் பயணிக்க முடியும்.

பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் சைக்கிள்!
ஈக்கோ, டூர், ஸ்போர்ட் மற்றும் டர்போ என 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் சைக்கிள்!
விலை மற்றும் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் உள்ளிட்ட விபரங்களை பிஎம்டபிள்யூ இதுவரை தெரிவிக்கவில்லை.

பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் சைக்கிள்!
மொத்தம் 1,000 குரூஸ் சைக்கிள்கள் மட்டும் தயாரிக்கப்பட உள்ளன.



Click it and Unblock the Notifications








