சென்னையில் சூப்பர் பைக் வீரர்களுக்கான பயிற்சி முகாம்

சூப்பர் பைக் வீரர்களுக்கு பயிற்சியை வழங்குவதில் கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூல்(சிஎஸ்எஸ் )உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
1980ம் ஆண்டு கெய்த் கோட் என்பவரால் துவங்கப்பட்ட இந்த சூப்பர் பைக் பயிற்சி பள்ளி நிறுவனம் உலக அளவில் 27 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் பைக் பயிற்சி பள்ளிகள் மூலம் இதுவரை 1.50 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளது சிஎஸ்எஸ்.
மோட்டோ ஜீபி, வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் மற்றும் இதர பைக் ரேஸ்களில் இதில் பயிற்சி பெற்ற வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு முதல் சென்னையில் சூப்பர் பைக் வீரர்களுக்கான பயிற்சி முகாம்களை சிஎஸ்எஸ் நடத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 250 வீரர்களுக்கு சிஎஸ்எஸ் பயிற்சி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்திய வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க உள்ளது சிஎஸ்எஸ். இந்த மாதம் சூப்பர் பைக் வீரர்களுக்கான புதிய பயிற்சி முகாமை சிஎஸ்எஸ் துவங்க இருக்கிறது. வரும் 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை முதல் பயிற்சி முகாமும், 25ந் தேதி முதல் 27ந் தேதி வரை இரண்டாம் பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாமில் வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ரெட்புல் புரோட்ஜி ஜோ ராபர்ட் கவுரவ பயிற்சியாளராக செயலாற்ற உள்ளார். இந்த பயிற்சி முகாமுக்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராடு ஸ்பான்சஸ் வழங்குகிறது.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ரேஸுக்கு ஏற்ற விதத்தில் மாற்றப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்குகளை வழங்க இருக்கிறது. இதேபோன்று, பயிற்சியாளர்களுக்கு பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்குகள் வழங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








