பியாஜியோவின் வெஸ்பா ஸ்கூட்டரின் பரிணாம வளர்ச்சி!

இந்தியாவில் எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் மூலம் இத்தாலிய பிராண்டான வெஸ்பா வேகமாக பிரபலமாகி வருகிறது. தனக்கென தனித்துவமான டிசைனுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் வெஸ்பா ஸ்கூட்டர் பிராண்டு பியாஜியோவின் ஓர் அங்கம். இந்த நிலையில், வாகன தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு சுவாரஸ்ய வரலாறு இருந்தாலும் வெஸ்பா ஸ்கூட்டர் பிராண்டின் துவக்கம் வரலாற்றோடு மிகுந்த நெருக்கம் கொண்டது.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பியாஜியோவின் போர் விமான தயாரிப்பு ஆலைகள் பலத்த சேதமடைந்துவிட்டது. இதுதவிர, இத்தாலியில் போர் காரணமாக சாலைகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது. எனவே, வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதுதான், பியாஜியோ சாலைகளில் எளிதாக செல்வதற்காக புதிய வெஸ்பா ஸ்கூட்டர் பிராண்டை தோற்றுவித்தது.

மேலும், வெஸ்பா பிராண்டில் கரடுமுரடான சாலையிலும் செல்லத்தக்க உறுதியான ஸ்கூட்டர் மாடலை தயாரிக்க துவங்கியது. இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக 1960ம் ஆண்டு வெஸ்பா ஸ்கூட்டர்கள் அறிமுகமானது. பியாஜியோவிடம் லைசென்ஸ் பெற்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெஸ்பா ஸ்கூட்டர்களை தயாரித்தது.

ஆனால், 1971ல் லைசென்சை பஜாஜ் ஆட்டோ புதுப்பிக்காததால் வெஸ்பா ஸ்கூட்டர் தயாரிப்பு நின்று போனது. மீண்டும் 1983ல் இந்தியாவில் எல்எம்எல் நிறுவனத்துடன் இணைந்து வெஸ்பா ஸ்கூட்டர்களை பியாஜியோ அறிமுகம் செய்தது. இந்த உறவும் 1999ம் ஆண்டுடன் அற்று போனது.

சிறிய ரக வர்த்தக வாகனங்கள் மூலம் இந்திய மார்க்கெட்டின் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்ட பியாஜியோ ஒருவழியாக கடந்த ஆண்டு வெஸ்பா ஸ்கூட்டரை கூட்டணி இல்லாமல் அறிமுகம் செய்தது. அந்த நிறுவனம் அறிமுகம் செய்த எல்எக்ஸ்125 ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆண்டுகள் கடந்தாலும் வெஸ்பா ஸ்கூட்டர்களின் தனித்துவமான டிசைனுக்கு இன்றளவும் உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றம் கண்டு வரும் வெஸ்பா ஸ்கூட்டரின் பரிணாம வளர்ச்சியை ஸ்லைடரில் காணலாம்.

வெஸ்பா ஸ்கூட்டர்களின் பரிணாம வளர்ச்சி

வெஸ்பா ஸ்கூட்டர்களின் பரிணாம வளர்ச்சி

துவங்கியது முதல் ஒரே நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் வெஸ்பா பிராண்டின் தயாரிப்புகள் தனித்துவமான டிசைனை அடுத்து வரும் படங்களில் காணலாம்.

1945 எம்பி6 புரோட்டோடைப்

1945 எம்பி6 புரோட்டோடைப்

1946 வெஸ்பா 98

1946 வெஸ்பா 98

1949 வெஸ்பா

1949 வெஸ்பா

இதுதான் வெஸ்பாவின் முதல் 125சிசி ஸ்கூட்டர்.

1950 வெஸ்பா மான்தெரி

1950 வெஸ்பா மான்தெரி

வெஸ்பாவின் பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட்டி மாடல்.

1951 வெஸ்பா 125 செய் கியோர்னி

1951 வெஸ்பா 125 செய் கியோர்னி

1951 சிலுரோ

1951 சிலுரோ

1956 வெஸ்பா 150 டேப்

1956 வெஸ்பா 150 டேப்

1959 வெஸ்பா 50 எலிஸ்டார்ட்

1959 வெஸ்பா 50 எலிஸ்டார்ட்

1964 வெஸ்பா 50

1964 வெஸ்பா 50

1965 வெஸ்பா 180 பிஎஸ்

1965 வெஸ்பா 180 பிஎஸ்

1967 வெஸ்பா ஆல்ஃபா புரோட்டோடைப்

1967 வெஸ்பா ஆல்ஃபா புரோட்டோடைப்

1968 வெஸ்பா 125 பிரைமாவெரா

1968 வெஸ்பா 125 பிரைமாவெரா

1968 வெஸ்பா 180 ராலி

1968 வெஸ்பா 180 ராலி

1976 வெஸ்பா 125 பிரைமாவெரா இடி3

1976 வெஸ்பா 125 பிரைமாவெரா இடி3

1976 வெஸ்பா ராலி 200

1976 வெஸ்பா ராலி 200

1977 வெஸ்பா ஜிகான்டே

1977 வெஸ்பா ஜிகான்டே

1978 வெஸ்பா பி125எக்ஸ்

1978 வெஸ்பா பி125எக்ஸ்

எம்பி5 (மோட்டோ பியாஜியோ5)

எம்பி5 (மோட்டோ பியாஜியோ5)

வெஸ்பா 150ஜிஎல்

வெஸ்பா 150ஜிஎல்

வெஸ்பா எல்எக்ஸ் 125

வெஸ்பா எல்எக்ஸ் 125

Article Published On: Friday, February 15, 2013, 12:04 [IST]
English summary
Vespa, the Italian scooter brand whose popularity is growing in India following the launch of the LX 125 premium lifestyle scooter, has a unique history. Named after the Italian word for wasp, the Piaggio owned scooter brand has gained popularity over the years through its distinct looking scooters.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+