அடுத்து 2 புதிய 250சிசி பைக்குகளை அறிமுகம் செய்யும் ஹயோசங்- டிஎஸ்கே கூட்டணி
இந்திய மார்க்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிமியம் பைக் பிராணடு ஹயோசங். டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணி வைத்த பினஅ இந்த நிறுவனத்தின் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
ஹயோசங் பைக்குகளுக்கு கிடைத்த வரவேற்பு டிஎஸ்கே நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. எனவே, அடுத்த இரண்டு புதிய 250 சிசி பைக்குகளை டிஎஸ்கே கொண்டு வருகிறது.

ஜிடி250என்
கடந்த மாதம் நடந்த மிலன் ஆட்டோ ஷோவில் இந்த புதிய பைக் மாடலை ஹயோசங் அறிமுகம் செய்தது. அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யவும், ஏப்ரலில் விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. இது கேடிஎம் டியூக் பைக்குகளுக்கு போட்டியை கொடுக்கும்.

எஞ்சின்
ஜிடி 250என் பைக்கில் 28 எச்பி பவரை அளிக்கும் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது கேடிஎம் 200 பைக்குக்கு இணையான பெர்ஃபார்மென்ஸ் கொண்டது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

விலை
பின்புறம் மோனோஷாக் அப்சார்பர், டைமன்ட் டைப் டியூபியூலர் ஃப்ரேம், அலாய் ஸ்விங் ஆர்ம் மற்றும் 17 இஞ்ச் வீல்களுடன் வருகிறது. ரூ.1.6 லட்சம் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும்.

அக்குலா 250 க்ரூஸர்
கைனடிக் நிறுவனத்தின் கூட்டணியில் இந்த பைக்கை ஏற்கனவே நம் நாட்டு மார்க்கெட்டில் குறைந்த எண்ணிக்கையில் எஸ்டி மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது டிஎஸ்கே நிறுவனம் இந்த பைக்கை மீண்டும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. அக்குலா 650 க்ரூஸர் பைக்குக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த பைக்கை மீண்டும் அறிமுகம் செய்ய இருக்கிறது டிஎஸ்கே.

எஞ்சின்
இந்த புதிய அக்குலா பைக்கில் 27 பிஎஸ் பவரை அளிக்கும் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

விலை
வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டிஎஸ்கே - எஸ்டி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ரூ.2 லட்சம் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அசெம்பிள்
இந்த இரண்டு புதிய பைக்குகளும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








